120
அப்பாத்துரையம் - 25
வுலகத்தில் அவர்களே எல்லாம் நடத்தட்டும். நான் போகிறேன்' என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.
கடவுள் கட்டளைப்படி விசயரங்கனுக்கு உணர்வு வரு விக்கட்டதும், அவன் ‘ஆ உணவு தந்து என் தவத்தைக் கெடுப் பானேன். உங்களால் நீக்கமுடியாத பழியைக் கடவுளிடம் கேட்டு நான் நீக்கிக்கொள்வதையும் ஏன் தடுக்கவேண்டும்? இது நேர்மையா?' என்றான்.
குருக்கள் முகத்தில் அசடுவழிய மனக்கசப்புடன், “உன் கடவுள் உன் பழியை நீக்கிவிட்டார். அவர் கட்டளைப்படிதான் உனக்கு இந்தக்கடைசிப் பணியை வேண்டாவெறுப்பாகச் செய்தேன். இனி நீபோய் இவ்வுலகில் வாழலாம். எனக்குத்தான் கடவுளில்லை.நான் போகிறேன்' என்றார்.
விசயரங்கன் மனமகிழ்ச்சியால் அவர் காலில் விழப் போனான். குருக்கள் அவனை உதறித்தள்ளி, 'என் காலில் நீ விழவேண்டுவதில்லை. கடவுளிடமே போய்க் காலில் விழலாம். இனி என் காலந்தான் போயிற்று. நான் போகிறேன்' என்று சுரங்கத்தில் நுழைந்தான்.
விசயரங்கன் அவரைப் பின்பற்றிச்சென்று “ஐயா, எங்கே போகிறீர்கள்.என் தீமைகளைக்காண எண்ணிய நீங்கள் நன்மை களையும் கண்டுகளிக்க வேண்டாமா?” என்று கூறினான்.
குருக்கள் "அதைக் கண்டுகொண்டு என்னால் வாழ முடியாது. இந்தக் கோயிலுக்கும் இனிநான் பூசைசெய்ய முடியாது. வேறு ஆள்பார்த்துக்கொள். என்னைவிடு” என்று திமிறிக்கொண்டு போய் முதலைக்குளத்தில் குதித்தார்.
இரண்டு முதலைகள் அவர் உடலைப் பங்கிட்டுத் தின்று
விட்டன.
மனவருத்தத்துடன் விசயரங்கன் அங்கேயே நின்றான்.பின் கோயிலைச்சுற்றி ஒரு தடவை பார்த்துவிட்டு நாட்டுக்கு வந்தான்.
கண்ணையிழந்து பெற்றவர்கள்போல் திருமலாம்பாள், மன்னன் தாய், குழந்தைகள் குடிகள் யாவரும் மகிழ்ந்தனர்.
அரசன் அக்கோயிலை மீண்டும் கட்டிமுடிக்க அமைச்ச ருக்கு உத்தரவிட்டான். ஆனால் அவர்கள் செல்லுமுன் கோவி லெங்கும் தவிடுபொடியாய்க் கிடந்தன. அதனைச் சுற்றியுள்ள காடுகளும் தீப்பிடித்தெரிந்துகொண்டிருந்தன.