இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காதல் மயக்கம்
121
தன் முடிவுடன் அக்கோயிலும் முடிவிடட்டும் என்று குருக்கள் வெடிமருந்தால் அதனைத் தவிடுபொடியாக்கும் ஏற்பாடுகளை செய்துவைத்தே இறந்தார். பசுஞ்சாணியில் புதைந்திருந்த தீப்பாசாணத்தின் ஆற்றலால் குருக்கள் இறந்து சில மணி நேரத்துப்பின் அது பற்றி வெடித்தது.
கடவுளின் பேராற்றலிலிருந்து கடவுளின் கருணையை அகற்றினால் ஏற்படும் வடிவமே இக்குருக்களின் வடிவம் என்று மன்னன் தன் அமைச்சர்களிடம்கூறி அவருக்கு அக்கோயில் முதலைக்குளத்தினருகிலேயே ஈமக்கடன்களாற்றக் கட்டளை
யிட்டான்.