காதல் மயக்கம்
123
சச்சி இதனை ஒரு பகைச்செயல் என்று கொண்டு பழிவாங்கும் எண்ணமுடையவளாயிருந்து வந்தாள்.
அக்குவின் கணவன் சாத்தனுக்கு நிறைந்த செல்வமிருந்த தனால் அவன் தன் நேரத்தைப் பெரிதும் கவறாடுவதிலும் உரையாடுவதிலுமே போக்கிவந்தான். அக்குவும் அவனுடனும் அவன் நண்பருடனும் சிலசமயம் விளையாடியும் உரையாடியும் இருப்பாள். அவர்களுடன் அளவளாவிப் பழகிய உற்ற நண்பன் நீலகண்டன் என்பவன். அவனும் சாத்தனைப்போலவே நல்ல செல்வ நிலையிலுள்ளவன். ஆகவே அவன் தன் நேரத்தின் பெரும் பகுதியைச் சாத்தன் வீட்டில் விளையாடியே போக்கி வந்தான். விளையாடாத நேரங்களில் அவன் உலாவுவான் அல்லது உடற்பயிற்சி
செய்வான். அவன் நல்ல உடற் கட்டுடையவன். அவ்வூர் மருத்துவர் நல்ல உடற்பயிற்சி பெற்ற உடலுக்கு அவனையே இலக்காகக் கூறுவார். அவன் மண மாகாதவனாயினும் சமயப்பற்று மிகுந்தவனாயும் ஒழுக்க முடைய வனாயுமிருந்ததனால், சாத்தன் வீட்டில் சாத்தனிருந் தாலும் இல்லாவிட்டாலும் அக்குவுடன் தங்குதடையில்லாமல் அண்ணன் தங்கை போல் பழகிவந்தான்.
அக்குவிடம் வர்மம் கொண்டு அவள் மீது பழி வாங்கக் காத்துக்கொண்டிருந்த மருத்துவச்சி சச்சிக்கு எதிர்பாராத வகையில் ஒரு துணைக்கருவி கிடைத்தது. இயற்கையில் மண வாழ்க்கையில் விருப்பமோ பெண்களிடம் பற்றுதலோ ல்லாதிருந்த நீலகண்டனுக்கு அக்குவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கியபின் அவள்மீது கெட்ட எண்ணம் தோன்றியது. அக்குவும் அவள் கணவனும் சூதுவாதற்றவர்களாக இருந்ததும், அவர்களும் ஊராரும் அவன் நல்லொழுக்கத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்ததும் அவனுக்குத் துணிவை ஊட்டின.
ஒரு நாள் சாத்தன் தனக்குவர வேண்டிய வாடகைப் பணங்களைப் பிரிக்கச் சென்றிருந்தான். வழக்கம் போல் நீலகண்டன் அங்குவந்து அக்குவுடன் கவறாடிக் கொண் டிருந்தான். அவன் அன்று வழக்கத்திற்கும் மிகுதியாக அவ ளுடன் சிரித்துரையாடியும் மறைபொருள்படப் பேசியும், அவள் 'ஏதோ அன்று அவனுக்கு மன எழுச்சியுண்டாயிருந்தது' என்று நினைத்தாளே யொழிய வேறு எக் குறிப்பையும் உணரவில்லை.