124
அப்பாத்துரையம் - 25
ஆகவே இன்னும் சற்றுத் தெளிவாகத் தன் கரத்தைத் தெரிவிக்க எண்ணிச் சட்டென அவள் கையை எடுத்துத் தன் கையினால் அழுத்தினான். வழக்க மற்ற அந் நடத்தையால் அக்கு திடுக் கிட்டாள். அவள் முகம் கறுத்தது. வெடுக்கென அவள் தன் கையை இழுத்துக் கொண்டாள்.
நீலகண்டன் அவள் கோபம் கண்டு அச்மடைந்து விட்டான். ஆயினும் அதனைக் காட்டிக்கொள்ளாமல், தன் பிழையை அப்படியே மழுப்பிவிட எண்ணி “ஐயோ பாவம்? ஒரு ஆட்டத்திலேயே இவ்வளவு களைத்துவிட்டீர்களே. உங்கள் நாடி அதற்குள் துடிதுடிக்கத் தொடங்கிவிட்டதே' என்றான்.
அவனது தீடீர் மாறுபாடுகள் அவளைக் குழப்பின. ‘தான் நினைத்தது போல் அவன் தப்பெண்ணம்தான் கொண்டிருக்கி றானா? அல்லது உண்மையிலேயே தன் நாடியைப் பார்க்கத்தான் முயன்றானா?' அவளால் ஒன்றும் உறுதியாக முடிவு செய்ய முடியவில்லையானாலும் அச்சமும் விழிப்பும் ஏற்படுத்தி விட்டன. ஆயினும் ‘நாமாக எதுவும் காட்டிக் கொள்ளாதிருந்து பார்ப்போம்' என்று அவள் எண்ணினாள்.
“உங்கள் கணவன் இன்னும் வருவதாகக் காணோம். நீங்கள் முற்றிலும் களைப்படைந்திராவிட்டால் இன்னொரு ஆட்டம் ஆடலாம்!” என்றான் நீலகண்டன்.
அக்கு ‘எனக்கு மிகவும் களைப்பாகவே இருக்கிறது.மேலும் எனக்கு உறக்கச் சடைவு வேறு' என்றாள்.
நீலகண்டன், அப்படியானால் நீங்கள் சற்றுப் படுத் துறங்குங்கள். நான் வெளியே புறத்திண்ணையில் இருக்கிறேன்' என்றான்.
அக்குவுக்கு உண்மையில் உறக்கம் வரவுமில்லை. அவள் உறங்கவுமில்லை. அறைக்கதவைச் சார்த்திக்கொண்டு மனதில் பலவும் எண்ணி எண்ணி நேரம் போக்கினாள்.
ஒரு மணி நேரத்துக்குள் சாத்தன் அங்கே வந்தவன் நீலகண்டன் வெளியே தனியே இருப்பது கண்டு 'ஏன் வெளியே இருக்கிறாய்?' என்று கேட்டான்.
நீல: அக்குவுக்கு உடம்புக்குச் சற்று குணமில்லை. ஆகவே அவளைத் தூங்கவிட்டு நான் இங்கே இருக்கிறேன்.