உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

125

சாத்: அவள் தூங்கினாலென்ன? நீ உள்ளே இருப்பது தானே! நீ அயலான் அல்லவே

இதற்குள் அக்கு கதவைத்திறந்து கொண்டு, வெளியே வந்தாள். நீலகண்டன் அவள் பக்கம் திரும்பி 'இப்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?' என்றான். 'ஆம், இப்போது மிகவும் நலம்தான்' என்று அவள் வழக்கமான முறையிலேயே கூறினாள்.

அக்கு பரிமாற, சாத்தனும் நீலகண்டனும் எப்போதும் போல் உண்டு வழக்கப்படி ஆடிப்பாடியிருந்தனர். சிறிது நேரம் விளையாடிய நீலகண்டன மாலையுலாவிற்காக வெளியே சென்றான்.

அக்குதன் கணவன் தனிமையாயிருந்த சமயம் நீலகண்டனைப் பற்றிப் பொதுவான சில கேள்விகள் கேட்டாள். அவன் என்றும் போல் அவனைப் பெருமைப் படுத்தி ‘அவன் சிறந்த ஒழுக்க முடையவன்' என்று பேசினான். அக்கு அன்று நடந்த சிறு நிகழ்ச்சியையும் அதன் பின் ஒன்றும் நடவாததுபோல் அவன் நடித்ததையும் கூறினாள். சாத்தன் தன் மனைவி தான் வேண்டாத ஐயங்களை மனதிற்கொண்டு அவன் நட்புரிமையைத் தவறாகக் கொண்டாள் என்று எண்ணி அவளைக் கடிந்து கொண்டான். அவளும் தான் செய்தது பிழைதான் என்று ஒத்துக் கொண்டு அதன்மேல் முன்போல் நடப்பதாக உறுதியளித்தாள்.

ஆனால் அமைதியான நீர் நிலையில் சிறு கல்விழுந்தாலும் பின் முற்றிலும் பழைய அமைதி ஏற்படாதல்லவா? அதுபோல் கணவன் இருக்கும் போது நீலகண்டனுடன் தாராளமாகப் பழகினாலும், தனியே விடப்பட்டபோது அவள் கூடிய மட்டும் விழிப்பாகவும் கண்காணாத் திரை ஒன்றை டையிலிட்டுமே நடமாடி வந்தாள்.

பெண்களிடமே இது வரை மனத்தை நாடவிடாமல் நம்பிக்கையுடனும் வெற்றியுறுதியுடனும் அக்குவை ஆழம் பார்க்க எண்ணி அவளிடம் உரிமையெடுத்துக் கொண்ட நீலகண்டனுக்கு முதல் படியிலேயே அவள் கொண்ட கடுஞ் சினத்தோற்றமும் அவமதிப்பும் பொறுக்க முடியாதவையா யிருந்தன. அவனது வருத்தத்திற்கு அவன் தோல்வி மட்டுமன்றி