உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

||-

அப்பாத்துரையம் - 25

அவனது தன் மதிப்பிழப்பும் காரணமாயிற்று. உள்ளூர் அவனுக்கு அவள் மீது பொறாமை, பகைமை, வஞ்சம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஏற்பட்டன. அவன் மேற் பூச்சான நற்குணத் தோற்றம் அவற்றை மறைத்து வளரச் செய்தனவே யன்றி அவனைத் திருத்தவில்லை. உண்மையில் அவனை விடக் குறைந்த ஒழுக்க நடிப்பு உடைய எவனும் நாம் தானே தவறு செய்தோம் என்று எண்ணித் தன்னையே கடிந்திருப்பான். அதோடு சாத்தன் களங்கமற்ற நட்புரிமையை எண்ணியிருப்பான். ஆனால் நீலகண்டன் தற்பெருமையும் கோபமும் இந்நன்றிகளை எண்ணவிடாது அவன் அறிவை மறைத்தன. அவன் எப்படி யாவது தன்னை அவமதித்த அக்குவின் செருக்கை அடக்கி அவள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று ஆழ்ந்த சூழ்ச்சி செய்யலானான்.

ஆனால் அக்குமீது குறைகூறுவது எளிதன்று என்பது அவனுக்குத் தெரியும். களங்கமற்ற தாராள நட்புத் தன்மையிடையே இச்சிறு செயலின் தன்மையை உடனே கண்டு சட்டெனத் தன் செயலை வளரவொட்டாமலும் மீண்டும் நிகழவொட்டாமலும் தடுத்தவள் அவள். பிறரிடம் இயற்கை யாகவே நடந்தும் தனக்குமட்டும் எவருமறியாத கண்காணாத் திரையிட்டவள் அவள். அதுமட்டுமா? கணவன் வரும்வரை உறங்குவதாகச் சாக்குச் சொல்லி மெல்லத்தன்னை வெளியே அனுப்பும் சூழ்ச்சி நயம் உடையவள் அவள். எனவே அவள் சூழ்ச்சிகள் என்று அவன் எண்ணிய இவற்றினும் ஆழ்ந்த சூழ்ச்சி யால் அவளை வெல்ல அவன் எண்ணினான்.

பாம்பின்கால் பாம்பறியும் என்றபடி வஞ்சகர்களுக்கு வஞ்சகர்களை அறியும் ஆற்றலுண்டு. அக்குவுக்குக் கேடு செய்வதென்றால், அதற்கு உடந்தையாயிருக்கக்கூடிய உயிர் அந்த ஊரில் சச்சி ஒருத்திதான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே அவள் வீடு சென்று தனிமையில் அவளைக்கண்டு ‘எனக்கு உன்னால் ஒரு உதவிஆகவேண்டும். அக்குவின் வீட்டில் பேறுகாலத்திற்கு நீ சென்றிருக்கிறாய். அவள் உனக்குச் செய்த தீமையையும் அதன் காரணமாக நீ உள்ளூர அவள் மீது கொண்டுள்ள பகைமையையும் வேறுயார் அறியாவிட்டாலும்