உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

127

நான் அறிவேன். ஆகவே அவள் வகையில் நான் அறிய வேண்டிய விவரங்களை நீ கூறுவாய் என்று நம்பிவந்திருக்கிறேன். அவள் அங்க அடையாளங்களைப் பிறர் அறிந்துள்ள அளவினும் சற்றுக் கூடுதலாக அறிய விரும்புகிறேன்'என்றான்.

அவன் என்ன திட்டமிட்டு இவற்றைக் கேட்கிறான் என்று சச்சியால் அறியக்கூடவில்லையாயினும், அக்குவுக்கு ஏதோ கேடு சூழ்கிறது என்பதை மட்டிலும் அவள் குறிப்பாக அறிந்தாள். அவளுக்கு வேண்டியதும் அவ்வளவுதானே! ஆகவே அவன் கேட்டவிவரங்களை அவள் கூறினாள்.

நீலகண்டன் ஆழ்ந்த சூழ்ச்சித்திட்டம் பெரும்பாலும் அவன் நினைத்தபடியே நடந்தது.

சாத்தன் இருக்கும்போதே நீலகண்டன் அவ்வப்போது அக்குவுடன் உரையாடாமலும் நெருங்காமலும் இருந்துவந்தான். சாத்தன் ஏன் இருவரும் ஒரு மாதிரியிருக்கிறீர்கள் என்பான். நீலகண்டன் ‘அக்குவுக்குச் சற்று உடம்புக்குக் குணமில்லை போலிருக்கிறது, என்பான். அவளும் வேறு கூறுவதற்கில்லாமல் ‘ஆம்' என்று ஒத்துக்கொள்வாள். ஆனால் சாத்தனுடன் மட்டும் முன்னைவிட ஒட்டிக்கிரட்டியாய் அவன் விளையாடியும் பேசியு மிருப்பான்.

ஒருநாள் திடீரென்று நீலகண்டன் சாத்தன் வீட்டுக்குப் போவதை நிறுத்தித் தன் வீட்டிலேயே தங்கினான். இதற்குமுன் அவன் வீட்டிலேயே தங்கினான். இதற்குமுன் அவன் வீட்டில் வேறு எதற்கும் தங்குவது கிடையாது. கடவுள் வழிபாட்டில் சிறிது நேரம் கழிப்பதற்கு மட்டுமே வீட்டில் அவன் தங்குவான். இன்று அவன் வீட்டிலேயே தங்கினானாயினும் வேறு எதுவும் செய்யாமல் ஒரே நீண்ட வழிபாட்டில் இருந்துவந்தான்.

வழிபாட்டை இதுவரை அவன் வெற்றிகரமான வாழ்க்கைக் குரிய ஒரு இன்றியமையாக் கடமை என்று மட்டும் எண்ணி வந்தான். ஆனால் இன்றோ அவன் கொடிய அழிவுத்திட்டத் தில் அது ஒரு பகுதியாயிற்று.

அவன் எதிர்ப்பார்த்தபடி அவனுக்காக நெடு நேரம் காத்திருந்தும் வராததால், தான் உண்ணாமல் அவனையிட்டு