144
அப்பாத்துரையம் - 25
அம்மு: அவர்கள் செல்வர்களல்லவே. செல்வமிருந்தால் கூடப் பிறருக்கு யார் நாள்தோறும் கொடுப்பார்கள். எனக்கு நீங்கள் கணவனைப் பெற்றதாய். நான் தான் தங்களுக்குக்
கடைமைப்பட்டவள்.
தைலம்: போதும் பசப்புக்காரி, எனக்கு உணவு கூடத் தராதவர்களுக்குப் பரிந்து அங்கே உண்ணும் உணவை இங்கே உண்ணலாம் என்று வந்தாயோ?
அம்மு: அப்படியொன்றுமில்லை மாமி. எங்கும் நான் உழைத்து உண்ண வேண்டியவள்தான். இங்கு உழைப்பது உரிமை என்றுமட்டுமே நினைத்தேன்.
தைலம்: இங்கே உனக்கென்ன உரிமை? பாசம் எல்லாம் அங்கே, பரிவெல்லாம் இங்கே. போதும் உன் உரிமை. என் மைந்தனைக் கொன்றுதின்றாயே. அந்த உரிமை போதாதா?
அம்மு: அம்மா, அவர் இறக்கும் போதுநான் இங்கேகூட இல்லையே. மேலும் அவருக்காக நீங்கள் வருந்துமளவு நானும் வருந்துகிறவளாயிற்றே. நான் கொன்றேன் என்று அடாப்பழி
கூறலாமா?
தைலம்: நீ கொல்லாவிட்ால் உன் சாதகபலன் கொன்றது. எல்லாம் ஒன்றுதானே.
அம்மு: நீங்கள் சாதகம் பார்ததுத்தானே யம்மா மணம் செய்வித்தீர்கள்.
தைலம்: அதெல்லாம் இப்போது ஏன் அளக்கிறாய்? என்னிடம் இனி என்ன வழக்கு? அதிலும் உன்னைப்போல் கணவனிறந்த பின்பும் துரோகம் செய்கிறவள் கண்ணில் கூட விழிக்கக்கூடாது.
அம்மு: நான் ஒரு துரோகமும் என் கணவருக்குச் செய்ய வில்லையே!
தைலம்: எனக்கென்ன கண்ணில்லையா? கணவன் இறந்து இவ்வளவு நாளாயிற்று. இன்னம் கூந்தலை விரித்துக்கொண்டு ஒய்யாரச் சேலையுடன் என்முன் வந்து பேச உனக்கு எவ்வளவு திண்ணக்கம்?