உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

145

அம்மு: மாமி, இளவிதவைகள் மொட்டையடிப்பது மில்லை, வெள்ளை கட்டுவதுமில்லை. இது உங்களுக்குத் தெரியாததல்லவே. ஏனிப்படி வீண் பழி கூறுகிறீர்கள்?

தைலம்: நான் ஏன் உன்னிடம் எதவும் கூறவேண்டும். நீ வந்து என் மகனிடம் மிகவும் பற்றுதலுள்ளவள் போல் நடித்த னால் கூறுகிறேன். கணவனிடம் அன்புடையவர்கள் கணவ னிறந்தபின் இவ்வழக்குகளை எண்ணமாட்டார்கள். நானெல் லாம் கணவனிறந்த அன்றே மொட்டையடித்துக் கொண்டேன்.

அம்மு: நீங்கள் அப்போது 40 வயதாயிருந்தீர்கள். 1 வயதாயில்லையே!

தைலம்: நாங்கள் 15 வயதில் கணவனைக் கொல்லும் பழிகாரிகளாயிருந்தால்தானே.நான் சொல்லுகிறேன். என்னை நீ கேட்காவிட்டாலும் சொல்லுகிறேன். என்ன வயதானாலும் அழகு செய்வது இளைஞர்களிடையே உல்லாசமா யிருப்ப தற்குத்தானே? இப்பேர்ப்பட்டவர்கள் இரண்டாம் மணங்கூடச் செய்வார்கள். என்னைப் பொறுத்தமட்டில் தலை மொட்டை யடிக்காது இவ்வீட்டில் நீ காலடி எடுத்து வைக்கவேண்டாம்!

அம்மு, "என்னால் மொட்டையடித்துக் கொள்ளவும் முடியாது. நான் உங்கள் வீட்டுக்கு வரவுமில்லை” என்று கூறி விட்டுத் திரும்பினாள்.

அம்மு வீட்டில்

தைலத்தைப்போன்ற எண்ணங் கொண்டார் இல்லாமலில்லை. தாய்தந்தையர் அம்மு சிறு பிள்ளையாதலால் மொட்டையடிக்க வேண்டுவதில்லை என்றே சொன்னார்கள். ஆனால் அம்முவின் அண்ணன் மாதேவன் மொட்டையடிக்காவிட்டால் குடும்பத்திற்குக் கெட்டபெயர் என்று வாதிட்டான். அறுத்துக்கட்டிக் கொள்ளும் (விதவை மணம் செய்யும்) வகுப்பனிர்தான் மொட்டையடிக்காமலிருப்பர் என்றும் அவர்களைப் பார்த்து மற்றவர்களும் கெடுகிறார்கள் என்றும் அவன் விளக்கப் புகுந்தான்.

மாதேவன் வாதத்தால் வேறு எந்தப் பலனும் ஏற்பட வில்லையானாலும் அவன் கூறிய விளக்கம் அம்மு மனத்தில் புதிய எண்ண அலைகளை உண்டுபண்ணின. இந்நாட்டிலேயே