உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(146) || -

அப்பாத்துரையம் - 25

அறுத்துக்கட்டும் வகுப்புக்கள் இருக்கின்றன என்று அவள் கேட்டது அதுதான் முதல் தடவை. அதனுடன் பல சீர் திருத்தவாதிகளும் சமயத் துறையறிஞர்களும் பண்டைக் காலத்தில் தமிழர்களிடையிலும் பிறநாடுகளிலும் இவ்வழக்கம் இருந்ததென்று கூறியதை அவள் படித்திருந்தாள். சாத்திரமறிந்த சில பண்டிதர்கள் வேண்டாவெறுப்பாக அதை ஒத்துக் கொள்வதையும் அவள் கவனித்திருந்தாள். இளவிதவைகள், அதிலும் மணவாழ்வின் தொடர்பேயில்லாத அவள் போன்ற கன்னி விதவைகளாவது மணந்துகொள்ள நேர்மையான சமூகம் வழி வகுப்பதில் தவறில்லை என்றும் அவள் எண்ணியதுண்டு. இப்போது தன் வாழ்க்கையிலேயே இந்தக் கேள்வி எழுந்து விட்டது என்பதை அவள் எண்ணிப் பாராதிருக்க முடியவில்லை.

இயற்கையில் காதல் வாழ்க்கை இன்னதென்று அறியாத அவள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் முழுவதும் ஆராய்ச்சி யாக மட்டுமேயிருந்தன. தாய், தந்தை அண்ணன் ஆகியவர்கள் நாளாசரித்தொடர்பில் இதையெல்லாம் அவள் மறந்தாள்.

அவ்வப்போது அண்டை அயலார் கண் அவள்மீது படும். அவள் ஓடி ஒளிந்து கொள்வாள். அவர்கள் இளைஞர்களானால் அவள் சற்றுக் கோபமடையக் கூடச் செய்வாள். விதவைகளிடம் இந்தச் சமூகம் ஐயப்படுகின்றது: அவர்களைக் கட்டிக் காக்கிறது. ஆனாலும் அடுத்தவீட்டு விதவைகளை ஊடுருவிப்பார்ப்பதை இந்தச் சமூகத்து மக்கள் மானக்கேடென்றும் எண்ணுவதில்லை. என்ன வஞ்சகச் சமூகம்!' என்றெண்ணுவாள். சிலசமயம் "ஆண்கள் வெட்கமில்லாமல் மூன்றாவது நாலாவது மனைவி கட்டிக் கொள்கிறார்கள். சிலசமயம் ‘ஒருவர் இருக்கும் போதே பலரைக் கட்டிக் கொள்கிறார்கள். பெண்களுக்கு அம்மாதிரி செய்யும் உரிமையைத் தடுத்ததுடனில்லாமல் அவர்களைப் பழிக்கிழுத்துவிட்டு அழித்து, தாங்கள் குற்றமற்றவர்கள் போல் தப்பிவிடவும் பார்க்கிறார்கள். ஒரு பாலுக்கு ஒரு நீதி என்ற வ்வாண்கள் சட்டம் எவ்வளவு கொடுமையானது!' என் றெண்ணுவாள்.

அவர்கள் குடும்ப மருத்துவரான முதியவர் ஒருவர் இருந் தார். அவருடன் அவர் புதல்வன் எக்ஞகாராயணனும் வருவான். தந்தை எல்லார் நலங்களும் விசாரித்துப் போவதுண்டு.