உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

அப்பாத்துரையம் - 25

விசுவநாதன் தலையிலடித்துக்கொண்டு

'இப்படி

யெல்லாம் பெண்கள் தலைதெறித்துப் போவதால்தான் நம் தர்மம் கெட்டுப் போகிறது' என்றான்.

அவள் சிரித்தாள்.

"உங்களைப் போன்ற வஞ்சகர்கள் வஞ்சனைகளால் கெடாது பிழைத்திருந்தாலல்லவா அது எங்களால் கெடுக்கப்பட முடியும்" என்றாள் அவள்.

விசு: “என்னை எதிர்த்துப் பேசத் துணிந்துவிட்டாயா? இந்துப் பெண்களுக்குக் கணவன் தெய்வம் என்பதை மறந்து விட்டாயா?”

உருக்கு: "ஆம். ஆனால் நீங்கள் என் தெய்வமன்று, பேய். என் தீராப்பழியின் மனித உருவம். உங்களைக் கடவுளாக மதித்துத்தான் நான் இக்கதிக் காளானேன்.

விசு: நீ ஏனோ இப்படிப் பேசுகிறாய். இனி நாம் அழிந்து போகத்தானே வேண்டும் என்பதை நீ உணர்ந்தாயா?

உருக்கு: வளரும் பெண்ணொருத்தியின் வாழ்வைக் கெடுப்பதைவிட நாம் அழிந்தாலென்னவாம்!

விசு: சரி. இனி என்னை எப்படியும் காவலில் போட்டுவிடு வார்களே!

உருக்கு: போனால் நல்லதுதான். அது உங்களுக்கு நல்ல படிப்பினை.

விசுவநாதன் ஆலகால விடம்போல் சினந்தெழுந்து அவளை வைது அடிக்கத் தொடங்கினான். அவள் அமைதியுடன் அடிகளை வாங்கிக்கொண்டு 'உங்களுடன் வாழ்வதை விடச் சாவது நல்லது என்றுதான் இருக்கிறேன். அதற்கு வழி தெரியாமல் திகைக்கிறேன். அடித்து நீங்களே கொன்று விட்டால் நல்லதாயிற்று' என்றாள்.

ஆனால் அவள் கோபக்குரல் கேட்டு அக்கம் பக்கத் தார்கள் வந்து உருக்குவைக் காத்தனர்.

இலட்சுமியிடமிருந்து புதுப் படிப்பினைகள் கற்றுக் கொண்ட உருக்குவுக்கு இப்போது ஒரு புது எண்ணம் தோற்