காதல் மயக்கம்
•
169
றிற்று. அவள் தன் கணவனுக்குப் பைத்தியம் என்றும், இலட்சுமியைத் தான் மணஞ்செய்தும் மனைவியாக்கிக் கொண்டும் விட்டதாகப் பிதற்றியதால் அவளை வெளியே அனுப்பிவிட்டதாகவும் அதனால் பைத்தியவெறி மிகுதியாகித் தன்னைக் கொல்ல வருகிறான் என்றும் கூறிப் புலம்பினாள்.
விசுவநாதன் தனக்குப் பைத்தியமில்லை யென்றும் மணம் நடந்தது உண்மைதான் என்றும் கூறிப் பார்த்தான். மணம் செய்த குருக்கள் பெயர் கூறிப் பார்த்தான். எவரும் கவனிக்க வில்லை. அவனே கடிதம் எழுதுவித்துப் பார்க்க, அவர் இறந்து விட்டதாக அறிந்தான். அவரைச் சேர்ந்தவர்கள் கூடப் பணம் கொடுத்தால்தானே ஏதாவது சொல்லுவார்கள்!
அவன் மனைவிமீது வெஞ்சினம் கூறினான், திட்டினான். அதனால் அவன் பைத்தியக்காரன் என்பதுதான் உறுதிப் பட்டது. இதற்கிடையில் இலட்சுமி ஓடியது கேட்டுப் பழய கடன்காரர்களும் இராமேசுரம் போகக் கடன் கொடுத்த புதுக் கடன்காரர்களும், வந்து சூழ்ந்து கொண்டனர். பலர் முன்பே நடவடிக்கை ஏற்பாடு செய்திருந்ததால் அவன் காவலிலிடப் பட்டான்.
உருக்குவுக்கு இப்போது வேறு செல்வமில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அவள் தன் நகைகளை விற்று அவனைத் தப்புவிக்க முயலக்கூடும் என்று அவன் எண்ணினான். எனினும் இத்தடவை அவள் விரலசைக்கவில்லை.
க
'வேறு எதுவும் இவரைத் திருத்தாது. இனிச் சிறை வாழ் வாவது திருத்துமா என்று பார்க்கிறேன்' என்றிருந்துவிட்டாள் உருக்கு. அவனை மீட்க முயலாது, தன் நகைகளில் சிலவற்றை விற்று ஒரு பசுவும் சில தளவாடங்களும் வாங்கிப் பால் விற்றல், தின்பண்டம் விற்றல் ஆகிய செயல்களில் அப்பணத்தை ஈடுபடுத்தி அவ்வுழைப்பால் வயிறு வளர்க்கலானாள்.
இலட்சுமியும் அவள் நிலையறிந்து அவளுடன் வந்திருந்து
உதவினாள்.
விசுவநாதன் சிறையில் அரைகுறையான, மோசமான உணவும், கடுமையான உழைப்பும் தரப்பெற்று, ஆறுமாதம் கழித்தான். உருக்கு ஏதேனும் விற்றுக் கொடுத்துத் தன்னை