170
-
அப்பாத்துரையம் - 25
டுவிப்பாள் என்று நம்பி அவனுக்குச்சிறைப் படி கொடுத்து வந்த கடன்காரர் ஏமாந்து அதனை நிறுத்தி விட்டனர். அவனும் விடுதலைபெற்றுத் தன் முழு வஞ்சகத்தையும் மனைவி மீது தீர்ப்பதென்று முடிவு செய்து வீட்டுக்கு ஓடிவந்தான்.
ஆனால் அவன் வீட்டில் வருமுன் கதவு தாழிடப்பட்டது. ஆங்காரத்துடன் காலால் கதவை உதைத்து, 'கணவனைச் சிறையில் அடைத்துவிட்டு இப்போது கதவை அடைக்கிறாயா?' என்று கூறினான்.
உருக்கு: இங்கே யார் கணவனும் சிறைக்குப் போகத் தக்கவர்கள் இல்லை என்றாள்.
ஊர்க்காவலன் ஒருவன் இரைச்சல் கேட்டுவந்து இங்கே ஏன் அமளி பண்ணுகிறாய்?' என்றான்.
விசு: என் வீட்டில் வந்து நான் கதவைத் தட்டுகிறேன். உனக்கென்ன?
ஊராரிடமிருந்தும் உருக்குவிடமிருந்தும் அவன் கதை முற்றும் கேட்டிருந்த காவலன் 'யார் கூறியது இது உன் வீடு என்று. இது உருக்கமணி, இலட்சுமி ஆகிய இருவருடைய வீடு. நாதியற்றுச் சிறையிலும் வாழ்வற்று வரும் உனக்கு வீடு ஏது? போ, எங்காவது போய்ப் பிழை. குடும்ப வாழ்க்கை நடத்து பவர்களிடம் சென்று தொந்தரவு கொடுக்காதே' என்று அதட்டினான்.
விசுவநாதன் உண்மையிலேயே பித்துப் பிடித்தவன் போல் தெரு வெங்கும் அலைந்து பலராலும் இழிக்கப்பட்டான்.வேலை கேட்டால் கூட அவனுக்கு வேலை தருவாரில்லை.
கடைசியில் திரும்ப ஒரு நாள் விடியற்காலையில் தன் வீட்டருகிலேயே வந்தான். இத்தடவை அவன் ஆங்காரம் செலுத்தவில்லை. கதவைத் தட்டக்கூடவில்லை. பொறுமை யுடன் வெளியே காத்திருந்தான்.
வீட்டு வேலைக்காரி சாணி தெளிக்கக் கதவைத் திறந்தாள். அவளிடம் அவன் பணிவாகக் கெஞ்சி 'அம்மா, நான் வழக்காட வில்லை. பசியால் வாடுகிறேன். எந்த வேலையும் செய்யத் தயங்கவில்லை. யாரும் வேலைகூடத் தரமாட்டேன் என்