உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

171

கிறார்கள். வீட்டம்மாவிடம் சொல்லி என்னை மன்னிக்கும்படி நல்மொழி கூறி என்னை இட்டுச்செல்' என்றான்.

அவன் பிடிவாதம் மாறுவதற்கே காத்திருந்த உருக்கு வெளிவந்து அவனை அழைத்துச் சென்று உணவு தந்து ஆதரவு செய்தாள். ஆயினும் அப்போதும் அவள் அவனிடம் மனம் விட்டுப் பேசவில்லை. 'நான் வேலை செய்ய ஒப்புக் கொண் டேனே. ஏன் இன்னும் கோபம் தீரவில்லை' என்று அவன் கேட்டான்.

‘என் காரியத்துக்கு அது போதும். இலட்சுமி பேரில் சுமத்திய பழி என்னாவது. அவளை நீங்கள் மணக்கவேயில்லை என்று ஊரறியக் கூறினாலன்றி இவ்வீட்டில் நீங்கள் வாழ முடியாது' என்று திடமாக அவள் கூறினாள்.

'அப்படியே நான் ஊரறிய யாவரிடமும் கூறுவதுடன் விரைவில் நானே அவளுக்கு வரன் தேடி மணமுடிப்பேன்' என்றான்.

அவர்கள் உழைப்பின் பயனாகக் குடும்பம் மீண்டும் செழித்தது. இலட்சுமியும் நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டாள்.

உருக்கு இலட்சுமியைக் கண்ட போதெல்லாம் ‘கண்ணே, நீ பெயருக்கு மட்டும் இலட்சுமி அல்ல. வறுமையையே தரும் வி யை வெல்ல வழி கண்ட இலட்சுமி நீதான் என்று பாராட்டுவாள்.

'நான் ஏதோ வழி காட்டியிருக்கலாம். வழி கண்டது நீ தான் அக்கா' என்பாள் இலட்சுமி.