190
||-
அப்பாத்துரையம் - 25
அம்பி: ஏதோ தெய்வச் செயலை என் செயல் போலவும், நாட்டுத் தர்மத்தை என் தர்மம் போலவு மல்லவா எண்ணிக் கோபித்துக் கொள்கிறாய். நான் என்ன செய்வேன்.
பாரு: “நான் அப்படிச் சொல்லத்தான் முடியவில்லை. அப்படி எண்ணினால் தவறில்லை. தன் கடமைகளை மழுப்பு பவர்கள் 'தெய்வச்செயல்' என்று கூறித் தாங்கள் முயற்சி செய்யாததற்கு நல்ல சாக்குச் சொல்லிவிடுகிறார்கள். தங்களுக்கு விருப்பமில்லாச் சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டைபோட நாட்டுத் தர்மம் என்கிறார்கள். இழவுக்குமட்டும் கடன் கொடுக்கும் தோழர்களும், பரோபகாரி யம்மையார் போன்ற வர்கள் வாழும் நாடும் அவர்கள் சமயமும தானே உங்கள் நாடும் சமயமும்?" என்றாள்.
அவள் எதிர்ப்பு வேதாந்தத்தை அவன் முற்றிலும் உணரக் கூட வில்லையாயினும் அவள் வசையின் குத்து எத்தகையது என்பதை அவன் அறியாதிருக்க முடியவில்லை.
பாருவுக்கு உலகசோதனை இன்னும் முடியவில்லை. “தனிமனிதர் தன்மையைப் பார்த்துவிட்டோம். ஆனால் நாலு பேர் இருக்கும்போது சர்வோபகாரியம்மைபோன்றவர்கள் கூட நன்மை செய்ய நாடுகிறார்களே. ஆகவே நாலு மனிதர் நடத்தும் கழகங்களையே நேரில் அண்டிப் பிழைப்புக்கோ, வேலைக்கோ வழி கேட்போம். பிச்சையும் எடுக்கவேண்டாம்' என்று பார்வதி எண்ணினாள். அதன்படி அவள் எங்கும் அத்தகைய கழகத்தை நாடித் தேடலானாள்.
பல டங்களில் தேடியபின் நீண்ட விளம்பரப்பலகை தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தைக் கண்டாள். அதில் 'விடுதலை பெற்ற கைதிகள் உதவிக்கழகம்' என்று எழுதப் பட்டிருந்தது. 'குற்றத்தண்டனை பெற்றவர்களுக்கே உதவி செய்யும் கருணை வள்ளல்கள் நமக்கு உதவிசெய்யவா மாட் டார்கள்' என்று எண்ணி அங்கே நுழைந்தாள். அவள் கட்டிடவாயிலை அணுகுமுன் ஒரு பணியாள் அவளை உள்ளே ஒரு கூடத்தில் அமரச் சொன்னாள். தனக்கு நல் வரவேற்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவள் ஒவ்வொரு நொடியும்