192
அப்பாத்துரையம் - 25
அவ் விழாவிற்கு வந்த பள்ளியாசிரியர் ஒருவரைக் கண்டு அவள், “உடல் நலம் குறைவற்ற, அதிலும் அதற்கு வேண்டும் செல்வம் நிறைந்த சீமான்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுப்பதால் நாட்டின் உடல் நலம் எப்படி வளரும். அதற்கு வகையற்றவர்களுக்கல்லவா உதவவேண்டும்" என்ற கேட்டாள். ஆசிரியர் நகைத்து ‘அம்மா, நீ உலக மறியாமல் சொற்களைக் கண்டு ஏமாறுகிறாய். இதெல்லாம் செல்வர் பொழுது போக்கு விழா. ஏழைகளுக்கு உதவி யென்பதெல்லாம் ஏழைகளை நயத் தாலும் பயத்தாலும் அடக்க ஒடுக்கமாக வைத்துக் கொள்ளச் செல்வர்களுக்கு உதவி செய்வதற்கும், அத்துடன் அவர்களுக்குப் பொழுது போக்குவதற் காகவும்தான். ஏழைகளுக்கு விழிப்பு ஏற்படும் வரை அரசியல் ஏழைகளைப் பற்றி அஞ்சவும் செய்யாது. அவர்களைப் பொருட்படுத்தவும் செய்யாது. செல் வர்களுக் கஞ்சி அவர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கும். அதனை ஏழைகள் கண்டு கொள்ளாதிருக்கத் தான்' ஏழைகளுக்குப் பரிவதாக வாய்ப்பறை யடிப்பது” என்றார்.
அவர் உலகமறிந்த ஆசிரியர் -ஆனால் அவருக்கும் அது ஒரு சிரிப்புக்கான செய்திதான்.
உடல்நல விழாவில் நடுவர் ஆயிருந்த சீமானையே தேடிக்கூடப் பார்வதி தன் கேள்விகளைக் கேட்டாள். ‘பஞ்சை ஏழையாகிய ஒர பெண் இப்படியெல்லாம் பேச எங்கே கற்றுக் கொண்டாள்' என்று அவர் வியப்படைந்தார். "இவற்றை யெல்லாம் பற்றி நன் சிந்தித்துப் பார்த்ததே யில்லையம்மா? சிந்தித்தாலும் இதையார் கேட்பார்கள்? நீங்கள் சொன்னால் கோபப்படுவார்கள் அல்லது அவமதிப்பார்கள். நான் சொன்னால் சிரித்துக் கொண்டு போய்விடுவார்கள். அவ்வளவு தான்.வேறுபலனிராது'என்றார்.
சமயம், அரசியல், அறம் ஆகிய மூன்று துறைகளையும் ஆராய்ந்து பார்த்து விட்ட பாருவுக்கு உண்மையில் நல்ல மூளைத் தெளிவு ஏற்பட்டுவிட்டது. இனி வெளியாரை அடுத்துப் பயனில்லை. தன் குடும்பத்தைத்தானே சீர் திருத்த முடிந்தால் தான்பயன் உண்டு என்ற கண்டாள். ஆகவே இதுவரை