காதல் மயக்கம்
193
கணவனிடம் பேசியதை விடச்சற்று வெளிப்படையாகத் தன் குறையைக் கூறுவதென்று தீர்மானம் செய்துகொண்டாள்.
பாரு: தெய்வச் செயல், தர்மம், அரசியலார் சீர்திருத்தம், அறநிலையங்கள் ஆகியவை ஒன்றும் ஏழைக்குடும்பங்களுக்கு உண்மையில் ஒர துரும்பும் உதவாதென்று கண்டுகொண்டேன். இனி நம் கையே நமக்கு உதவி என்று நாம் நடக்கவேண்டும்.
அம்பி: நம் கையே நமக்கு உதவ முடிந்திருந்தால், நாம் ஏன் ஊர்தேடிச் சென்றிருக்கவேண்டும்? நம்மாலேயே நம்மைச் சரிப்படுத்த முடிந்திருந்தால், பிள்ளைகள் பட்டினிகிடந்து சாவதை நாம் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? எனக் சொல்வது விளங்க வில்லையே!
கு நீ
பாரு: உங்களுக்கு ஏன் விளங்கப்போகிறது? அவரவர் படுகிறபாடு அவரவர்களுக்குத் தானே தெரியும்! உலகில் உள்ள சோம்பல் வேதாந்தத்தை நாம் திருத்த முடியாது. நம் வீட்டி லுள்ள வேதாந்தத்தை நாம்தான் மாற்றியமைக்க வேண்டும்.
அம்பி: என்ன வேதாந்தம் நம் வீட்டிலிருக்கிறது. நீ என்ன தான் சொல்கிறாய்?
பாரு: நம் வறுமையைப் போக்கும் வழிகளில் ஒன்று நீங்கள் செய்யக்கூடியது. உழைத்துப் பணம் தேடுவது. அது முடியும் வரையில் நான் செய்யக் கூடியது ஒன்று உண்டு. அதை நான் தான் உறுதியாகச் செய்ய வேண்டும். நம் வறுமை நீங்கும் வரையில் நான் பிள்ளைபெறக்கூடாது.
அம்பி: அது எப்படி முடியும்?
பாரு: மனிதச் செயலைத் தெய்வச்செயல் என்று கூறி நம்மையே ஏய்த்துக் கொள்ளாதிருந்தால் முடியும். நீங்கள் தெய்வச் செயலை நம்பலாம். பேறுகாலந் துன்பமுதல் எல்லா வற்றையும் நேரடியாகப்படும் எனக்கு அப்படிச் சொல்லிவிட்டுப் பேசாமலிருக்க முடியாது. மேலும் கெட்டகாரியங்களுக் கெல்லாம் உலகில் எத்தனை நடிப்பு இருக்கிறது. அவற்றைத் தர்மம், அறம் என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மனைவி பிள்ளைகளுக்கு உதவும்படி கொஞ்சநாள் நடிப்புக்குக்