194
||-
அப்பாத்துரையம் - 25
கணவனாயிருந்து, பிள்ளை பெருக்கும் நாட்டுத் தொண்டை விட்டு, வறுமை நீக்கும் மனிதத் தொண்டில் இறங்குங்கள்.
அம்பி: அத்தகைய புரட்சிக் கருத்துக்களை உன்மனதில் யார் புகுத்தினார்கள்?
பாரு: ஏன் இதுவும் உங்கள் தெய்வச் செயல்தான். நான் கண்ட தெய்வச்செயல் இதுதான். இனி நான் இருக்கிற பிள்ளையைப் பேணுவது தவிர வேறு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது, வறுமை நம் திசையிலிருக்கும் வரை.
அம்பியின் தெய்வச் செயல் வேதாந்தம் பறந்தோடி விட்டது. அவன் பல எளிய தொழில்களை நாடி ஏங்குவதை விட்டு ஓரிடத்தில் கீழாளாயிருந்து மேலாட்களின் நம்பிக்கை பெற்றுப், படிப்படியாக உயர் ஊதியம் பெற்றான். பாருவும் பதினைந்தாவது பிள்ளையுடன் பிள்ளைப் பேற்றுக்கு ஒரு நீண்ட ஓய்வு கொடுத்தாள்.
அவர்கள் பிள்ளைகளில் ஆறு நிலைத்தன. முன்போல் குசேலபரம்பரையாயிராமல் ஊக்கமுடைய பிள்ளைகளா யிருந்தன. அவற்றுட் சில கல்வி கற்று ஊதியம் பெற்றன. சில உழைத்து ஊதியம் பெற்றன.
நல்லுடல் பெற்ற பாரு தன் முதுமையின் எல்லையில் வந்தபின் கூடத் தன் பதினாறாவது கடைசிப்பிள்ளையைப் பெற்றாள். ஆனால் அது கட்டிளமையில் பிறந்த பிள்ளை போலவே உடல் நலமுடையதாய், அறிவுடையதாய் இருந்தது.
இளமை வாழ்வைக் கூடப் பொய்யாக்கும்படி அவர்கள் பிள்ளையும் பிள்ளையின் பிள்ளையுமாய் நல்வாழ்வு நடத்தினர். அம்பி வர வரப்பாருவிடம் அன்பும் மதிப்பும் அதிக முடைவ னானான். 'தெய்வம், தர்மம், நாடு, அறம், கடமை, உரிமை ஆகியவற்றால் எங்கும் பெறாத அறிவை உன் துணிந்த அறிவுத்திறத்தால் பெற்றேன். இது நீ தந்த செல்வம்' என்று அவன் அவளைப் பாராட்டுவான்.