12. உமா சுந்தரி அல்லது பெண்மையின்
உள்ளம்
உமாசுந்தரி பார்த்தசாரதியின் இளைய புதல்வி. அவள் பிறக்கும் போதே தாயைக் கொன்று பிறந்தவள் என்ற பெயருக் காளானவள். அவளையும் அவளைவிட ஒன்றிரண்டு ஆண்டு மூத்த பெண்ணான நித்தியகல்யாணியையும் அவள் தந்தையே வளர்த்து வந்தார்.
பார்த்தசாரதி சென்னையில் தரகு வர்த்தகம் நடத்தி வந்தவன். தற்கால வர்த்தகத் தரகர் இயல்புப்படியே அவன் ஆயிரம் நூறாயிரமாகப் பணம் திரட்டிக் குவித்தான். அதிலும் போர்க்காலத்தில் எல்லாப் பொருள்களும் அருந்தலாயிருந்த போது சிமிட்டி முதல் மண்ணெண்ணெய், சர்க்கரை வரை எல்லாப் பொருள்களையும் மறைவாகச் சேமித்து வைத்துக் கருஞ் சந்தையில் கொள்ளையாதாயத்துக்கு விற்றான். 'தண்ணீர் முடையான காலத்தில் தண்ணீரையும் விற்கலாம்', எவர் துன்பத்தால் பணம் வந்தாலும் பணத்தால் நமக்கு வருவது இன்பந்தான்' என்பவை அவன் அடிப்படைக் குறிக்கோள்களா யிருந்தன. சமூகத்துறையில் இத்தகைய கோட்பாட்டால் பொருள் தேடுபவர், குடும்பத்துறையில் வேறு எவ்வகையில் ன்பந்தேடுவார்? மனைவியைத் தெரிந்தெடுக்கும் வகையில் பொம்மையோல அழகும் பொம்மைபோலவே தனக்கெனச் செயலுமற்ற அப்பாவிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். ‘அறிவுடைய பெண் அகங்காரம் கொள்ளும்; செல்வர் வீட்டுப் பெண் தன்னைமதித்து நடக்கும்; பணமுடையவர் தம் செல்வாக்கைக்காட்ட வேண்டுமானால், புற அழகு ஒன்றை மட்டும் கருதியே பெண்தேடவேண்டும்' என்பான் அவன். இக்கருத்துக்கேற்றவளாய் அமைந்த அவன் மனைவியும் அவன் விருப்பப்படி அவனையே பேணி வாழ்ந்து இரண்டாவது