உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196 ||

அப்பாத்துரையம் - 25

பிள்ளை பிறந்ததும் இனி உலகில் கடமை எதுவுமில்லை என்ற அவனை விட்டகன்றாள். அவனும் பணம்தேடும் முயற்சிக்கு வேறு குந்தகம் நாடாமல் அப்பணியிலேயே முனைந்தான்.

கல்யாணி, உமா ஆகிய இருபுதல்வியர்களிடையே, கல்யாணி தாயின் அறிவும் தந்தையின் ஆணவமும் நிறைந்தவளா யிருந்தாள். செல்வ இறுமாப்பில் நின்ற அவளுள்ளம் கல்வியை ஒரு பொருட்டாய் எண்ணி ஏற்கவில்லை. ஆனால் உமாவிடம் தாயின் அழகு நிலைத்ததேயன்றி அவள் அறிவுநிலை ஏற்பட வில்லை. அவள் அழகுக்கு ஏற்ற கல்வியும் சுறுசுறுப்பும் உடையவளானாள். இதன் பயனாக இளமையிலிருந்தே கல்யாணிக்கு அவள் மீது பொறாமை ஏற்பட்டு வந்தது.

பார்த்தசாரதி தன் கொள்கைப்படி இரு புதல்வியரையும் செல்வர்களைத் தேடியே மணம் செய்து வைத்தான். கல்யாணி, இராமசாமி என்ற வழக்கறிஞர் மனைவியானாள். உமா, சுந்தரம் என்ற புலமையும் அறிவும் மிக்க கல்லூரிப் புலவரின் மனைவி யானாள். மணமான சில ஆண்டுகளுக்கு இருவர் வாழ்கைத் தரங்களும் கிட்டத் தட்ட ஒன்று போலவே இருந்தன. ஆனால் விரைவில் வாழ்க்கையின் விசித்திரமான சோதனைமுறை அவர்களைப் பிரித்தது.

கல்யாணி தன் கணவன் செல்வத்தில் மயங்கி எல்லாச் செல்வப் பெண்களையும் போலவே உணர்ச்சியற்ற வாழ்க்கையி லேயே நிறைவு பெற்றாள். ஆனால் உமா தன் கணவன் அறிவுத் திறம், அழகு, குணம் ஆகிய அனைத்திலும் ஈடுபட்டு அவரது காதல் வாழ்வினை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தாள். கணவனும் அவள் குறிப்பறிபவன் போலவே நடந்து கொண்டான். இருவரும் அடிக்கடி இசையரங்குகள், ஆடல் மேடைகள், படக்காட்சிகள் ஆகியவற்றுக்குச் சென்று களித்து வந்தனர்.

ஒரு முறை உமாவுக்குப் பம்பாய் நகர்க்காட்சிகளைக் காட்டும் எண்ணத்துடன் சுந்தர் அவளைப் புகைவண்டியில் இட்டுச்சென்றான். வண்டியின் இடவசதிக் குறைவால் பெண் களுக்கென ஒதுக்கப்பட்ட முதல் வகுப்புக் கூடத்தில் அவளை