உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

அப்பாத்துரையம் - 25

மு. மா: ஆம், தற்போது, எல்லாம் பொறுத்துப்பார். பின்னால் தெரியும்.

துன்பமுடிவு பற்றிய அவள் உறுதி துன்பக்கேணியில் கால்வையாத உமாவை நடுங்க வைத்தது. அவள் ‘நீ யாரம்மா' என்ற கேட்டாள்.

மு. மா: நான் அமராவதி நாட்டின் அரசி.

உமா: ஓர் அரசியின் மணவாழ்வுகூடவா இவ்வளவு துயரமாயிற்று.

அரசி: ஆ, இன்பமாகிய மயக்கமருந்து உட்கொண்ட எத்தனையோ பெண்களில் நீயும் ஒருத்திபோலும்! அழகும் பகட்டும் அணிமணியும் ஆடையும் புறத்தே - நம் ஆழ்ந்த அழிவை மறைக்க, பிறர் நம்பாதிருக்கச்செய்யவே அத்தனையும்! சொல்லப்போனால் இந்தியாவின் அரசிகள் துயரத்தைப் பார்க்க, ஏழைப் பெண்கள் துயரம் ஒரு துயரம் அல்ல என்னலாம். அரசன் மனங் கவர்ந்த ஆடலணங்கைவிட அரசி இழிவாகவே நடத்தப்படுகிறாள். என் புதல்வி ஓர் அரசனை மணப்பதைவிட ஓர் ஆண்டியை மணந்தால் எவ்வளவோ நலம். ஆனால் யாரை மணந்தாலும் பெண்ணின் வாழ்வு பிழைப்பட்ட வாழ்வே. அழிவு சற்று முன்பின். அல்லது சற்று மாறுபட்ட வகைகளில்; அவ்வளவுதான்.

உமா: நீ கூறுவது அவ்வளவும் அப்படியே உண்மையாய் ருக்க முடியுமா, அம்மா!

அரசி: நான் கூறுவது பொய்யாயிருந்தால் நல்லது என்றுதான் நானும் எண்ணுவேன். ஆனால் என்னால் அப்படி எண்ணக்கூடவில்லை. இதோ நீ இப்போது அன்றலர்ந்த செந்தாமரைபோல்தான் இருக்கிறாய். உன் ஆடையணிகளுக்கே நீ அழகு கொடுக்கக் கூடியவள்தான். ஆனால் ஆடை அணிமணி நிலைக்கலாம்; உன் இன்பம்.....'

>>

வாழ்க்கையின் கசப்பையெல்லாம் பிழிந்தெடுத்த அவள் உரைகளை முற்றிலும் கேட்க உமாவுக்குப் பிடிக்க வில்லை. வண்டியும் அப்போதே நின்றதால் அதைச் சாக்கிட்டு அவள் முகம் பாராமலே இறங்கிவிட்டாள். ஆனால் அரசியின் உருவம்