உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

199

புறக் கண்ணை விட்டகன்றதே யொழிய, சோகமே உருவெடுத்த அவள் தோற்றம் மனக்கண் முன்னிருந்து அகலவேயில்லை. “மணம் என்பது ஒரு சூதாட்டம். அதில் இழப்பது எப்போதும் பெண்கள்தான்..... பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு ஒரே ஒரு விடுதலை. அதுதான் சாவு” துன்பக்கேணியின் ஆழத்திலிருந்து வந்த இச்சொற்கள் அவள் அகக் காதில் என்றும் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

சுந்தர் இக்கதையைக் கேட்டுச் சிரித்தான்.

இரண்டுமாதம் கழித்துச் சுந்தருக்குக் கல்கத்தாவில் ஓர் உயர் பதவி கிடைத்தது. அதை ஏற்க அவன் கல்கத்தா சென்றான். கல்கத்தாவில் வீட்டு வசதி செய்யும்வரை உமாவை இட்டுச் செல்ல முடியாதாதலால் அவன் உமாவை அவள் தமக்கை கல்யாணி வீட்டில் விட்டு, தான் மட்டும் சென்றான். உமா அவனுக்கு அடிக்கடி தன்மனத்திலுள்ள பிரிவுத்துயரத்தை முற்றிலும் விளக்கிக் காதற்கடிதங்கள் எழுதுவாள். அவளும் வழக்கம்போல் கனிவான மொழிகளால் அவளைத் தேற்றி எழுதுவான்.

பட்டகாலிலேபடும் என்பதற்கிணங்கப் பிரிவுத் துன்பத்தை யடுத்து உமாவுக்குப் பல துன்பங்கள் தோன்றின. சுந்தர் அவ ளுக்கு வீடுதேடி அழைத்துக் கொள்ளுவதில் ஆத்திரம் கொண்டவனாகவே காணவில்லை. அவள் வீடு தேடும் வகையில் வற்புறுத்த வற்புறுத்த, அவன் மறு மொழியில் உணர்ச்சியற்ற அசட்டை மனப்பான்மையே வளர்ந்து வந்தது. இதற்கிடையில் திடீரென உமாவின் தந்தை பார்த்தசாரதி காலமானான். இறுதிக்காலத்தில் அவன் வர்த்தகத்தில் பெரு நட்டம் ஏற்பட்டது. கருஞ்சந்தைக்கு வழியில்லாமலும், அவ்வப்போது கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டனை யடைந்தும், அவன் தீய வழியில் ஈட்டிய பொருள் முற்றிலும் கரைந்தது. ஆகவே அவன் மருமக்கள் எதிர்ப்பார்த்தபடி அவன் பெருஞ் செல்வம் அவர்கட்கு வரவில்லை. செல்வத்திற்காகவே மணந்த செல்வ மருமக்களிருவரும் தம் மனைவியர் நிலைகண்டு ஏமாந்தனர். ஆயினும் கல்யாணி கணவனைப்போலவே பணப்பித்துடையவளானதால் அவள் கணவன் அவள்