உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 25

ஆகவே, அவள் இப்போது தானாக டிக்கரிவென்னை நாடிச் சென்றாள்.தானாக உளம் திறந்து அவனிடம் பேசத் துணிந்தாள்.

அவன் அவளை வணங்கினான். அவளும் வணக்கம் தெரிவித்தாள். "இக்குளிர்காலத்தில் நீ இன்னும் இங்கே இருப்பாய் என்று நினைக்கவில்லை" என்றாள் அவள்.

"இங்கே சிறிது வேலை உண்டு. ஆகவே தங்கியிருக்கிறேன்.” "வேலைகாமிண் சார்ந்ததல்ல வென்று நினைக்கிறேன். செல்வி யோப்ரைட்..."

66

66

‘ஆம்”

‘அவளை நீ மணந்துகொள்ளப் போகிறாயா?"

டிக்கரிவென் முகம் சிவந்தது, கோபத்தாலல்ல, நாணத்தால். ஆனால் அவன் சொற்கள் அதற்கு வேறுவிளக்கம் தந்தன. என்னை ஏளனம் செய்ய வேண்டாம், அம்மணி நான் அதற்குத்தகுதியுடையனவல்ல. அவள் நலம் விரும்புகிறேன். வில்டீவை மணக்க அவளுக்கு ஏற்பட்ட தடையில் அவள் அவமதிப்பு அடைந்து குன்றிப்போயிருக்கிறாள். அவள் வாழ உதவுவதன்றி வேறு எண்ணம் எனக்கில்லை.

55

முன்பு வில்டீவ் வந்தபோது அவன் குறித்த செய்தி முழுவதும் சரியல்ல என்பதை யூஸ்டேஷியா இப்போது உணர்ந்துகொண்டாள்.பெண்ணின் நோக்கமும் தன் நோக்கமும் இப்போது ஒன்றே என்று கண்டதும் அவள் வந்த காரியத்தில் அவள் திட்டம் எளிதில் உருவாயிற்று.

இச்சமயம் தொலைவிலிருந்து வில்டீவ் அவ்வழி வருவதை அவள் கவனித்தாள். “நான் உன் வண்டியினுள் சிறிது நேரம் ஓய்வுகொள்ளலாமா?" என்று கேட்டாள். அவன் வியப்புற்றான். ஆனால் "சரி" என்றான். அவள் உள்ளே சென்று மறைந்துகொண்டாள். வில்டீவ் அவளைப் பார்க்கவில்லை. டிக்கரியிடம் வணக்கம் கூறிவிட்டு அப்பால் சென்றான். அவன் போனதும் அவள் இறங்கிவந்தாள்.

“போனது வில்டீவ்” என்றான் அவன். அவன் வேறு யாரோ என்று ஒளிந்து கொண்டாள் என்பது அவன் எண்ணம்.