உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

66

'அது எனக்குத் தெரியும். அதனாலென்ன?'

31

"நீங்கள் அப்படிக் கேட்பதுகண்டு மகிழ்கிறேன். என் நேற்றைய அனுபவத்துடன் இது ஒத்துவருகிறது” என்று புதிர்போட்டான் அவன்.

அவள் போக அவசரப்பட்டாள். ஆனால் இப்புதிய புதிரையும் அறிய அவாக்கொண்டாள். “நேற்றைய அனுபவம் என்னவென்று கூறத் தடையுண்டா?" என்று கேட்டாள்.

"தடையில்லை. நேற்று ஒரு நங்கைக்காக வில்டீவ் கல்லறைமாடத்தில் காத்திருந்தான் வீணாக."

"நீயும் காத்திருந்துதானே பார்த்தாய்?”

“எப்போதும் பார்ப்பதனால்தானே இவற்றை அறிகிறேன்.”

அவளுக்குப் பழைய செய்திகள் பலவற்றின்மீது ஒளி விளக்கம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவள் அதற்காக வருந்தவில்லை. கோபப்படவுமில்லை. “சரி, நாளையும் நீ போவாயல்லவா?" என்று கேட்டான்.

“ஆம், நீங்கள்?”

"நான் வரவில்லை. அவனைப் பார்க்க விரும்பவில்லை. அதேசமயம் நேரில் பார்க்காமலே செய்தி அறிவிக்க விரும்புகிறேன்.”

அவன் புரிந்துகொண்டான். அவன் விரும்பியதும் அதுவே. “நீங்கள் செய்தி கூறினால் கூறச் சித்தமாயிருக்கிறேன். அல்லது கடிதம் தந்தால் கொடுக்கிறேன்” என்றான்.

அவள் கடிதம் கொடுத்தாள். அவன் வாங்கிக்கொண்டான். "இறுதியாக உங்கள் மனமாற்றங் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இதன் காரணத்தையும் கூற முடியுமானால்..."

66

'அது வேண்டாம்” என்று அவள் எழுந்தாள்.

அன்று கல்லறை மாடத்தில் டிக்கரி முன்பே வழக்கம் போல ஒளிந்து காத்திருந்தான். வில்டீவ் வந்து அதன்பின் சிறிதுநேரம் இருந்தான். அதன்பின் கணக்காய் எட்டு மணிக்கு டிக்கரி