32
அப்பாத்துரையம் - 25
வெளிப்பட்டு "இன்று சரியான நேரத்தில் சந்தித்துவிட்டீர்கள்!” என்றான்.
வில்டீவ் விழித்தான். “யாரை?” என்று கேட்டான்.
க
“வழக்கமாக ஒருவரை; இப்போது இருவரை"
66
66
'ஒருவரைத்தானே காண்கிறேன்”
'ஆம்; இதோ மற்றவர்" என்று கூறி அத்தகைய கொடுத்தான். தன் எதிரியிடமிருந்து அவன் அத்தகைய எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் இது ஏதோ இவன் ஏமாற்றுக்களில் ஒன்று என்று கருதி அதைப் படித்தான். அவன் முகம் விளறிற்று.
என்
கடிதம் வருமாறு:
"திரு. வில்டீவ் அறியவும்.
ஆர அமரச் சிந்தித்தபின், இனி நாம் எத்தகைய சந்திப்புத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன்.சிந்திக்கும்தோறும் இம்முடிவே வலியுறுகிறது. உள்ளம் உங்களுக்குத் திறந்திருந்ததுவரை, நீங்கள் வேறொருவரை நாடிய போதும் பொறுத்திருந்தேன் என்பதை அறிய அங்குள்ள உணர்ச்சிநிலையை நான் பின்பற்றி அதன் முடிவைத் தெரிவிக்கும் உரிமை எனக்கு உண்டு என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். முன் என்னிடம் உங்கள்பால் இருந்த உணர்ச்சி இப்போது எனக்கு இல்லை. அது என்னிடம் ஒரு குற்றமாயிருக்கலாம். ஆனால் அது நீங்கள் குறை காணத்தக்க ஒரு குற்றமாகாது என்பதை அறிவீர். முன் தொடர்பால் உங்களிடம் பெற்றுக் கொண்ட சிறுபொருள்கள் இத்துடன் அனுப்பப்படு கின்றன. முன்பு நீர் வேறிடம் நாடியபோதே, நான் முறைப்படி, அதை அனுப்பியிருக்க வேண்டும். கடிதம் கொண்டு வருவாரிடமே அவற்றை ஒப்படைத்தனுப்பியுள்ளேன்.
யூஸ்டேஷியா."
மறுபேச்சுப் பேசாமல் வில்டீவ் வீடு திரும்பினான். நான் முதல்தர முட்டாளாய் விட்டேன். இரண்டு மான்கள் என் லையில் சிக்கியிருந்தன. இரண்டையும் இழந்துவிட்டேன். இப்புதிர்களின் காரணமென்ன, இம்மாறுதலுக்குக் காரணமான