தாயகத்தின் அழைப்பு
33
புதுமனிதன் யார் என்று அறியாமல் அவன் துடித்தான். ஏமாற்றுபவர் தாமும் ஏமாற்றப்படும் நிலை வருவது அரிதல்ல என்று கண்டான்.
முழுத்தோல்வி, அவமானத்திலிருந்து மீள இப்போது ஒரே ஒரு வழிதான். உடனே போய்த் தாம்ஸினையாவது மணம் செய்துகொள்ள வேண்டும்'. இத்தடவை கடத்துவது அவனுக்கு ஆதாயமன்று. அவன் நாளை என்று இருக்காமல், உடனே சென்றான்.
கிளிம் வரும்வரை உணர்ச்சியற்றிருந்த தாம்ஸின் அவன் வருகைக்கு முன்னாள்தான் மைத்துனனை வரவேற்க எழுந்து வேலையில் முனைந்தாள். அத்தையும் அப்போது தான் முதலில் வில்டீவை எதிர்த்ததற்கான காரணத்தை வாய்விட்டுக் கூறினாள். பாவம்! அவள் கிளிம்முடனேயே அவளை இணைத்துவிட விரும்பியிருந்தாள். தாம்ஸின் அத்தையிடம் சிறிது கண்டிப்பாக "இப்போது இதைச் சொல்லி என்ன பயன்? இனி நான் அவன் பெயரைக் கெடுக்காமலிருந்தால் போதாதா? என் மண முறிவுச் செய்தியை அவன் அறிந்தால் அது அவனுக்குத் தலையிறக்கமாய் விடும். அவனிடம் அதைக் கூறாமல் இருந்து, பிறர் கூறுமுன் மணவினையை முடித்தாகவேண்டும். அவன் மனம் திகைப்படை யாமல் இருக்க வேறு வழியில்லை” என்றாள்.
அத்தையும் அதுவே தக்க யோசனை என்று இணங்கினாள். இதன் பயனாக ஊரெல்லாம் அறிந்த செய்தி கிளிம்மினிட மிருந்து மறைக்கப்பட்டது.
மறுநாள் கிளிம் தன் நண்பனைப் பார்க்க வெளியூருக்குப் போக இருந்தான். அங்கே செய்தி அவனுக்கு எப்படியும் எட்டிவிடும். ஆகவே அவன் வருமுன் வில்டீவை எப்படியாவது சரிப்படுத்தி மறைவாக மணமுடித்துவிட வேண்டுமென்று அத்தையும் மருமகளும் முடிவுசெய்தனர். அனால், அவர்கள் திட்டத்தில் அவர்கள் முயற்சி இல்லாமலே வில்டீவ் வந்து நழுவினான். அவன் இரவே வந்து திருமதி யோப்ரைட்டைக் கண்டு "நாளையே தனிப்பட்ட முறையில் மணத்தை முடித்துவிடப் போகிறேன்" என்றான். அவன் ஆத்திரம் திருமதி யோப்ரைட்டுக்கு விளங்கவில்லை. தாம்ஸினுக்கும் அப்படியே. ஆனால் தாம்ஸின் இப்போது காதலாராய்ச்சியில் இறங்க