34
அப்பாத்துரையம் - 25
வில்லை. திருமதி யோப்ரைட்டும் காரணகாரிய நுட்பங்களில் கருத்துச் செலுத்தவில்லை.
66
"சரி" என்று தம் முடிவை அவர்கள் தெரிவித்தனர்.
மொத்தத்தில் வில்டீவ் மகிழ்ச்சியடைந்தான். முழுத் தோல்வியிலிருந்து தப்பியது இதற்கான ஒரு காரணம். மற்றொரு காரணமுமிருந்தது.யூஸ்டேஷியாவின் மனமாறுதலை அறியாத அவன் இம்மணச் செய்தி அவளுக்கு ஒரு தண்டனையாகு மென்றும், இதை வைத்து அவள் காதலை மீண்டும் புதுப்பித்து வளர்க்கலாமென்றும் மனப்பால் குடித்தான், இம்மகிழ்ச்சியால் வழியில் அவன் டிக்கரியைக் கண்டதும் “திருமணம் முடிவாகி விட்டது?" என்றான். அவன் முழு மகிழ்வுடன் பாராட்டினான்.
தாம்ஸினின் முடிவுக்குக் காரணமான ஒரு கடிதம் மேசையில் கிடந்தது. அது கிளிம் அயலிடத்திலிருந்து எழுதியது.
66
என் காதில் விழும் இந்த அருவருப்பான செய்தி உண்மையா? பொய்யானால் துணிந்து இப்பொய் எப்படி ஏற்பட்டது? உங்கள் விளக்கம் காணும்வரை முள்மேல் நிற்கிறேன். இவ்விளக்கமின்றி விரும்பவில்லை. தாம்ஸின் என்ன நிலையில் தான் இருக்கிறாள்?... பின் குறிப்பு:- நான் நாளைக்காலை வருகிறேன்.
நான் வெளியே தலைகாட்டவும்
தங்கள் மகன்
கிளிம்
""
கடிதத்தை அத்தைக்குக் காட்டாமலே தாம்ஸின் வாசித்து விட்டுச் செய்த முடிவு தான், வில்டீவுக்கு மேற்குறிப்பிட்டபடி போலி இன்பமளித்தது.
வில்டீவ் போனபின் தாம்ஸின் அத்தையிடம் கடிதத்தைக் காட்டினாள். அவள் முதல் தடவையாக மருமகள் முன்னறிவை மெச்சி அவளை அணைத்துக்கொண்டாள். ஆனால் “நாளைக் காலை கிளிம் வருவதாக எழுதியிருக்கிறானே, என்ன செய்வது? என்றாள்.
"வருமுன் மணமுடித்துவிட வேண்டும்." “கிளிம் இல்லாமலா?"