தாயகத்தின் அழைப்பு
35
"ஆம்; முடிந்த காரியத்தை அவனிடம் சொல்லி விளக்கிவிடலாம். அதை முடிக்காமல் அவன் கண்களில் எப்படி விழிப்பது?”
“சரி, அப்படியானால் மணவினைக்கு யார் வருவது? நான் மட்டும் போதுமா?"
"நீங்களும் வரவேண்டாம். இது குடும்பத்துக்கு மதிப்புத் தரும் திருமணமன்று.அவமதிப்பை மூடிவைக்கும் திருமணம்தான். என்னைத் தவிர இந்தக் குடும்பத்தில் யாரும்
இதில்
கலக்கவேண்டாம்.
""
டிக்கரிவென் காலையில் கதவைத் தட்டினான். திருமதி யோப்ரைட் தாமஸினை நோக்கி “இப்போது இன்னொரு காதலன் வருகிறானே” என்றாள்.
66
காதலன் அல்ல. மணமகனு மல்ல. மணமகன் தோழன்”
என்றாள்.
அதைக் கேட்டுக்கொண்டு வந்த டிக்கரி “மணமகள் தோழி யார் தெரியுமா?” என்றாள்.
"யார்?” அத்தையும் மருமகளும் ஒரு குரலில் கேட்டனர். “யூஸ்டேஷியா!”
இருவரும் விழித்தனர்.
ஆனால் விளக்கம் கேட்க நேரமில்லை. தாம்சின் அத்தை யிடம் விடைபெற்றுத் தான் மட்டும் டிக்கரிவென்னுடன் கோயில் சென்றாள்.
மணவினை எளிதில் முடிந்தது.
வில்டீவ் கோயிலில் யூஸ்டேஷியாவைக் கண்டு அவள் முன்னிலையில் மணமகனாகப் போகிறோம் என்பதுபற்றி மகிழ்ந்தான். ஆனால் அவளே மணமகள் தோழியாயிருந்தது கண்டு அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
காதலித்த காதல்கன்னியைக் காதலொழித்துக் கடிமணம் புரிந்தான் காதல் வேடனாகிய வில்டீவ்.