36
தாம்சின் கோயிலுக்குப்
அப்பாத்துரையம் - 25
புறப்பட்ட
சிறிது
நேரத்திலெல்லாம் கிளிம் வீட்டிற்கு வந்தான். வழக்கம்போல அவனை வரவேற்றுக் காலை உணவு வட்டிக்கப்பட்டது. அதுவரை அவனும் எதுவும் கேட்கவில்லை. யாரும் எதுவும் சொல்லவுமில்லை. தாம்சின் இன்னும் எழுந்து கீழே வரவில்லை என்று அவன் எண்ணி, "தாம்சின் இன்னும் ஏன் கீழே வரவில்லை?” என்றான்.
திருமதி யோப்ரைட் "இதோவந்துவிடுவாள்” என்றாள்.
அவளைப் பற்றி அவன் மேலும் பேச்செடுத்தான்.
அன்னை “இன்னும் அரைமணி நேரம் பொறுத்திரு. அவள் வந்ததும் எல்லாம் கூறுகிறேன்” என்றாள்.
அவனுக்குப் புதிர்மேல் புதிராயிற்று. ஆயினும், தன்னை அடக்கிக்கொண்டு வெறுப்பாய் ஏதோ அருந்தினான். திருமதி யோப்ரைட்டுக்கு இப்போதுதான் தாம்சின் மணம்செய்கிறாள் என்று கூறக்கூட மனமில்லை. முன் ஏமாற்றியவன் இப்போதும் ஏமாற்றாமல் காரியத்தை நடத்தினான் என்று தெரியும்வரை அவள் உள்ளம் உறுதிப்படவில்லை.
டிக்கரி முதலிலும் பின் மணமக்களும் வந்தபின்தான் அவளுக்கு உயிர் வந்தது.