உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதனூலாசிரியர் முன்மொழி

பர்மா நாட்டின் நெடுஞ்சாலைகளில் இடையிடையே சரிசம தூரங்களில் புழுதியடர்ந்த பாதையிலிருந்து போதிய தொலை அருகே விலகி ‘வழித்தங்கல் மனைகள்' அமைக்கப் பட்டுள்ளன. இவை சிறிய மரக்கட்டடங்கள். குளிர்மரப் பொதும்பரின் தண்ணறு நிழலில் அமர்ந்து வழிப்போக்கர் தங்கி இளைப்பாற இ வை உதவுகின்றன. இது மட்டுமன்று. அவர்கள் பசியும் விடாயும் தணித்துக்கொள்ளும்படி மனிதப் பாசமிக்க அந்நாட்டு மக்கள் அங்கேயே உணவு நீர் வசதிகள் செய்து உதவுகின்றனர். இதனைத் தம் சமயச் சார்பான அருட் கடமை என்றே பர்மியர் கருதுகின்றனர்.

வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையிலும் இதுபோன்ற தங்கல் மனைகள் இருக்கின்றன. இவை கோபதாப உணர்ச்சி களாகிய வெப்பத்திலிருந்தும், மனக்கசப்பு, தோல்வி மனப்பான்மை ஆகிய புழுதியிலிருந்தும் விலகி, பணிவார்ந்த மெய்யறிவென்னும் குளிர்நறுந் தண்ணிழலின் உயிர்மருங்கில் அமைந்துள்ளன. எளிய, பகட்டாரவாரமற்ற, அமைதியுருவான இத்தங்கல் மனைகள் பேரின்பத்தின் ஒதுங்கிய சோலைவனங்கள் ஆகும். நடந்தலுத்து நொந்த பாதங்கள் அவற்றிடையே வலிமை பெறுகின்றன. ஆனால் இத்தகையவர்கள் தவிர மற்றை யோர்களுக்கு அவை எளிதில் தென்படுவதேயில்லை.

வழியின் மருங்கமர்ந்துள்ள தண்டலைகளாகிய இவற்றை அசட்டை செய்து புறக்கணிப்பவர் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்பதில்லை. அவர்கள் வாழ்வென்னும் நெடுஞ்சாலையில் தொலைவிலுள்ள ஏதோ ஒரு மாய இலக்கை எட்டிப் பிடிக்கும் எண்ணத்துடன் பரபரப்பாகப் பறந்தோடுகின்றனர். அருகி லுள்ள வரை விலக்கித் தள்ளுகின்றனர். மருங்கிலுள்ள