உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

5

தண்டலைகள் மேலீடான பார்வைக்குக் கண்ணைப் பறிக்கும் பகட்டாரவார மற்றவையாதலால், அவற்றைச் சென்றடைவ தற்குரிய இடுங்கிய கிளைப் பாதைகளில் கவனம் செலுத்தாது மேற்செல்லுகின்றனர். அவை முக்கியமற்றவை என்று தள்ளிவிடு கின்றனர். ஆனால் நாழிகை கடந்து நாழிகையாகுந்தோறும், இத்தகைய மக்கள் சோர்வுற்றும் அயர்வுற்றும் விழ நேர்கிறது. இதயப் பசி, இதய வேட்கை, இதயச் சோர்வு ஆகியவற்றுக்கு ஆளாகி எண்ணற்றவர்கள் மடிகின்றனர்.

நேர்மாறாக, கோபதாப நெருக்கடிகளிலிருந்து விலகி, மருங்கிலுள்ள கிளை வழிகளில் கண்பார்வை செலுத்தி அவற்றின் வழியாகச் செல்பவனுக்கு வெம்புழுதியார்ந்த காலடிகள் வெப்பாறப் பதியும்படி ஈடும் எடுப்பும் அற்ற மென்மை வாய்ந்த அருள் மலர்ப்படுக்கைகள் காத்துக் கிடக்கின்றன. கால்கள் நோவகன்று அவற்றின் மென்மை நுகரும் அதே நேரத்தில், கண்கள்அவற்றின் பல்வண்ண வடிவழகு நுகரும். உள்ளம் அவற்றின் பண்பார்ந்த நறுமணம் துய்க்கும். இளைப் பாறிப் புதுவலுப் பெற்று, வாழ்க்கை நெருக்கடியின் சுழற்சியி னின்றும் அழற்சியினின்றும் விடுபட்டு, இன்ப அமைதியுடனும் உயிர் உரத்துடனும் அவன் முன்னேறிச் செல்வான். புழுதியில் அவன் உணர்விழந்து சாயமாட்டான். அவன் உயிர் நடுவழியில் சோர்வுற்று வீழ்ச்சியடையாது. அவன் வெற்றிகரமாகப் பயண முடித்து இன்பப் பேரிலக்கை அடைவான்.

அகல்பூங்காச்சாலை

இல்ஃவ்ராக்கோம்

இங்கிலாந்து

ஜேம்ஸ் ஆலன்