உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. நற்றொடக்கம்

'நாடும் எலாப்பொருளும் நல்லோரையில் தொடங்கி

நாளில் முடியும் நிகழ்ச்சிகளும் கூடும் தனியின்ப துன்பங்கள் யாவுமே

வீடு செலும்படிகள் போல்வனவே.

2 ஆடும் சிறகில்லை பறந்துவான் ஏக, இரு தாளுண்டு அடிபெயர்த் தாடவே.

3பொதுநிலை வாழ்வின் குறைகள் நெறிமுறைகள் பல்சாயல் வண்ணத்தில் தீட்ட விழைகின்றேன்.

-

லாங்ஃபெலோ

- பிரௌனிங்

வை

வாழ்க்கை என்பது பல சிறு செயல்கள், பல சிறு செயல் களின் பல சிறு தொடக்கங்கள் நிரம்பியது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் இ யில்லாமல் கழிவதில்லை. மிகப் பல வினைத் தொடக்கங்கள் சிறியனவாக, கவனித்தற்குரியனவல்ல என்று தள்ளத்தக்க அளவு அற்பமானவையாகவே தோற்றமளிக்கின்றன. ஆனால் உண்மையில் அத்தகைய சிறு தொடக்கங்களே வாழ்க்கையில் முதல்தர முக்கியத்துவம் உடையனவாகும்.

எல்லாப் பொருள்களும் மிகச்சிறிய தொடக்கங்களி லிருந்தே தோற்றுகின்றன என்பதை இயலுலகிலேயே காணலாம். ஆற்றல் மிக்க அகண்டமான பேராறுகளெல்லாம் முதலில் ஒரு வெட்டுக்கிளி தத்திக்கடக்கும் அளவு சிறிய ஓடையாகத்தான் பிறக்கின்றன. பெருவெள்ளங்கள் ஒரு சில மழைத்துளிகளாகத் தான் முதலுருப்பெறுகின்றன. ஆயிரம் புயல்கள் கண்டு உறுதியுடன் வானளாவி நிற்கும் தேக்குமரங்கள், ஒரு சிறு கொட்டைக்குள்தான் தொடக்கத்தில் அடங்கியிருந்தன.