உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

7

பல கால வளர்ச்சிகளாகிய நாடு நகரங்களையும் காடுகளையும் ஒரு நொடியில் எரிக்கும் பெருந்தீப் பிழம்புகள், கவனக்குறைவால் யாரோ எறிந்த ஒரு சிறு தீக்குச்சி அல்லது சிறு கொள்ளியி லிருந்து தான் பரவியுள்ளன.

ஆன்மிக வாழ்விலும் இதுபோல மிக நுண் தொடக்கங் களிலிருந்தே மாபெரும் பண்பு வண்ணங்கள் பிறப்பது காணலாம். ஒரு சிறு கருத்தலை அல்லது வேடிக்கைக் கற்பனை வியத்தக்க பெரிய அறிவியற் புதுப்புனைவுக்கோ, அழியாப்புகழ் நிறுவும் கலைப்புடைப்புக்கோ கருவாகக் கூடும். காற்றிடையே காற்றாகப் பேசிவிடும் ஒரு வாசகம் மனித வரலாற்றின் போக்கையே மாற்றி விடும் பெரும் புரட்சியாகிவிட முடியும். செயலற்ற ஒருவனது சிந்தனை உலகுக்கே புத்துயிரளிக்கவல்ல பேராற்றலுக்கு வழிவகுப்பதுண்டு. புலனாசையால் ஏற்பட்ட ஒரு சிறு விருப்பம் மிகப் பயங்கரமான பெருங்குற்றங்களுக்கு மூலமாய்விடலாகும்.

தொடக்கம் காரணகாரியத் தொடரின் முகப்பு

வெற்றி நாடுபவனே! நீ உன் வாழ்வில் தொடக்கங்களின் எல்லையற்ற அருஞ்சிறப்பாற்றலை உணர்ந்து கொண்டிருக்கி றாயா? தொடக்கங்களில் உள்ளீடாயுள்ள மறை நுட்பங்களை நீ அறிவாயா? நாளும் ஓரையும் கணமும் இடைவிடாது நீ ஈடுபடும் தொடக்கங்கள் எத்தனை? அவற்றின் உள்ளார்ந்த முழு வளம் எவ்வளவு என்பதை நீ மதித்துணர்கின்றாயா? - இவற்றை நீ இன்னும் நன்கு உணர்ந்து கொள்ளவில்லையானால், வாழ்க்கையின் நெடுஞ்சாலையில் என்னுடன் வா. வந்து அதன் கிளை வழிகளின் அருள் தங்கல்களைக் காண்பாயாக! அறிவோடு அவற்றை நீ ஆட்கொண்டால், நீ அருளாள்வாய்; பேரின்ப நிறைவு பெறுவாய்! அறிவார்ந்த உள்ளத்துக்கு அவைதரும் ஆறுதலும் புத்துரமும் புதுவாழ்வும் மிகமிகப் பெரிது.

தொடக்கம் என்பது ஒரு மூலகாரணம். காரணம் என்ற முறையில் அதற்கு ஒரு காரியம், ஒரு தொடர் பயன் இருந்தாக வேண்டும். இத்தொடர் பயன்களும் காரணங்களேயாதலால், காரணத்தின்பின் காரியம், காரிய உருவாகிய காரணத்தின்பின் மறுகாரியம் என ஒரு நீளமான சங்கிலித் தொடர் தோன்றி