உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம் - 29

விடுகிறது. ஏனெனில் காரணம் என்பது காரியத்தின் வேறன்று. காரியம் என்பதும் காரணத்தின் வேறன்று. நற்காரணம் நற் காரியம் உண்டுபண்ணும். தீக்காரணம் தீக்காரியம் உண்டு பண்ணும். தொடக்கம் நல்லதாக, நற்காரணமாக அமைந்தால், அதனைத் தொடரும் சங்கிலி தானாக நற்காரண காரியச் சங்கிலியாக அமைந்துவிடும். ஒரு நலன் பல நலன்களாக, ஒரு சிறு நலன் பல பெருநலன்களாகப் பல்கிப் பெருகும். வினைத் த் தொடக்கத்தில் அடங்கியுள்ள மறைஆற்றல் நுட்பம் இதுவே.

நல்லவினைத் தொடக்கமூலம் ஒருவன் பெறும் ஆக்க ஆற்றல் ஆன்மிக ஆற்றல் ஆகும். அது உண்மையில் இயந்திர ஆற்றல் போன்றது. அதில் முயற்சி சிறிது. முயற்சியின் விளைவு பெரிது. எடுத்துக்காட்டாக, ஒரு யானையின் பளு மிகமிகப் பெரிது. ஒரு தனி மனிதன் முயற்சி மிகச் சிறிது. அவனால் அதைத் தூக்க முடியாது. ஆயினும் கப்பிகள் மூலம் ஒரு தனி மனிதன் முயற்சியாலேயே அப்பளுவைத் தூக்கிவிட முடியும். ஒரு யானைப் பளுவை மட்டுமல்ல; பல யானைப் பளுவைக்கூடத் தூக்கி விட முடியும். கப்பி மிகச்சிறிய இயந்திரமே. பெரிய இயந்திரங்கள் இன்னும் பேராற்றலுடையன. அவை மலைகளைப் பிளக்கும். காலமும் இடமும் வெல்லும். ஆயினும் அவற்றுள் பலவற்றை ஒரு தனி மனிதனே இயக்குகிறான். நல்வினைத் தொடக்க மூலம் நாம் பெறும் காரணகாரியச் சங்கிலித் தொடர் வாழ்க்கைத் துறையில் இத்தகைய இயந்திர ஆற்றல், அஃதாவது ஆன்மிக ஆற்றல் படைத்த ஒரு கருவி ஆகும்.

கருவி, காரணம், காரியம் என்ற சொற்கள் தமிழில் 'கரு' என்ற மூலச் சொல்லுடன் தொடர்புடையதாய் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். கரு என்பது தொடக்க நிலை. அதுவே காரணமாகி,காரியமாகி, காரண காரியத் தொடரான சங்கிலி மூலம் உயிர் வளர்ச்சி அல்லது இயந்திர ஆற்றலின் வளர்ச்சி அல்லது ஆன்மிக வளர்ச்சி பெறுகிறது. இத்தகைய கருவளத்தை யே உயிர்வளம், பொங்கல் வளம் என்றும் தமிழர் குறித்தனர்.

நல்ல தொடக்கம், பாதி முடிவு!

தொடக்க முயற்சியின் தன்மை அல்லது இயல்பே அதன் காரணகாரியத் தொடர்பான பின்விளைவுகளின் போக்கையும்