உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 29

ஆற்றல் பயிற்சி: இயற்கை முறையும் போலி முறைகளும்

தன்னாற்றலையும் ஒருமுகச் சிந்தனை உறுதியையும் வளர்ப்பதற்கான வகைதுறைகள் எத்தனையோ நம்மிடம் தரப்படுவதுண்டு. அவற்றின் விளம்பரங்களை நாம் எங்கும் காணலாம். ஆனால் அவற்றில் ஒன்றில்கூட வாழ்க்கை அனுபவத்துக்குரிய ஒரு சிறு யோசனையையும் பார்க்க முடியாது. 'மூச்சுப் பயிற்சி', 'இருக்கைப் பயிற்சி”, “காட்சிப் பயிற்சி', ‘அகநோக்குப் பயிற்சி' - இவையே பொதுவழக்காய் உள்ளன. வாழ்க்கையின் மெய்ந்நிலை நடைமுறைகளுடன் தொடர்பற்ற இப்பழக்கங்கள் யாவும் போலியான செயற்கை வகை துறைகளேயாகும். அருமுயற்சியுடன் இவற்றில் ஆற்றலும் நேரமும் முயற்சியும் ஈடுபடுத்துபவர் பலர். ஆனால் இவற்றைவிட நேரான பாதையை ஒரே நேரான பாதையான கடமைப் பாதையைப் பின்பற்றுபவர் மிகச் சிலர். நாள்முறைக் கடமைகள் அனைத்திலும் முழு மூச்சாக ஒருமுகப்பட்டு உழைத்து இப் பாதையைப் பின்பற்றுவது ஒன்றே உண்மையில் தன் ஆற்றலை யும் ஒருமுகச் சிந்தனைத் திறத்தையும் வளர்க்கும் வழி ஆகும்.

ப்பாதை பெரும்பாலும் பலர் செல்லாத, பலர் காணக் கூட முனையாத, பலருக்குத் தெரியவராத பாதையாகவே இருக்கிறது. ஏனெனில் இஃது இயற்கைப் பாதை, உடனடி வளர்ச்சியைப் பகட்டாகக் காட்டாது, இயல்பாகப் படிப்படியாக மலர்ச்சியூட்டும் பாதை, வளர்பவர் அறியாமலே வளர்ச்சி உண்டு பண்ணும் பாதையாகும்.

ஆற்றல் பெறுவதற்காக வலிந்து கடுமுயற்சி செய்து பின்பற்றும் செயற்கை முறைகள் யாவும் வீணானவை, விலக்கத் தக்கவை, குழந்தை மனிதனாவதற்குக் காலத்தில் பரவிய படிப் படியான வளர்ச்சியன்றி வேறு குறுக்கு வழியோ சுருக்கு வழியோ இருக்க முடியாது. அதுபோலவேதான் அறியாமையிலிருந்து அறிவுக்கு, மயக்க அறிவிலிருந்து மெய்யறிவுக்கு, வலிமைக் கேட்

ட்டிலிருந்து வலிமைக்குச் செல்ல வளர்ச்சியன்றி வேறு வகைத் துறை தேடுவது வீண் முயற்சியாகும். நாளுக்கு நாள், சிறிது சிறிதாக, கருத்துடன் கருத்தும் முயற்சியுடன் முயற்சியும், செயலுடன் செயலும் இணைத்துத்தான் இவ்வளர்ச்சி ஏற்பட முடியும்.