உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

31

இருக்கைப் பயிற்சி, இடக்குமுடக்குப் பயிற்சிகள் மூலம் நீடித்த விடாமுயற்சியால் ‘பக்கிரி'கள் அல்லது அடயோகிகள் சிலசில அருந்திறங்கள் அடைகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்கள் பெறும் பலன் நோக்க, அவர்கள் மேற் கொள்ளும் தொல்லை மிகமிகப் பெரிது. அத்தொல்லைகளை நோக்கக் கிடைக்கும் பலன் மிக மிகச் சிறிது. அத்துடன் ஒரு திசையில் அவர்கள் பெறும் சிறு பயனுக்கெதிராக, மற்றத் திசைகளில் அவர்கள் அதற்கீடான, அதில் பன்மடங்கான இழப்புக்கும் ஆளாக நேர்கிறது.

தவிர அடயோகிகள் எங்கும் பிறருக்கு வேடிக்கை காட்டும் படி சில அருந்திறங்களை வலிந்து மேற்கொண்ட கோமாளி களாக இருக்கிறார்களேயல்லாமல், உரமிக்க உடலோ, வலிமை வாய்ந்த உள்ளமோ உடையவர்களல்லர். அவர்கள் திறமை கூட முழுமனிதருக்குரிய சரிசம நிலைப்பட்ட திறமையன்று. உறுப்புக் குறைபட்டவர்க்குக் கிட்டும் சரியீட்டுத் திறமை சரிசம நிலை கெட்ட திறமையேயாகும். பிறருக்குச் செப்படிவித்தை காட்டும் ஒரு சிறு நலனுக்காக, வாழ்நாள் முழுவதும் இத்தகு திறம் உடையவர்கள் உறுப்புக் குறைந்தவர் அல்லது நோயாளிகள் போல வாழ வேண்டியவர்கள் ஆகின்றனர்.

அகநிலை அமைதியே ஆன்மிக ஆற்றல்

தளர்ந்த சமநிலையற்ற உணர்ச்சியுடையவர்கள் மிச் சிறு புறத்தூண்டுதலின்பேரில் அமைதியிழந்து ஆராயாத திடீர் செயலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் நாள்முறைப் பொது வாழ்வில் நச்சரிப்புக்கள், தொல்லைகள், அறியாப் பிழைகள், ஒழுக்கக் கேடுகள் பெருக்கமுறுகின்றன. இவற்றை வென்று ஆட்கொள்வதே உண்மையான ஆன்மிக ஆற்றல் அல்லது தன்னடக்க ஆற்றல் ஆகும். இஃது அமைதியிலாது உலைவுறும் மக்கள் திரளிடையே ஒருவனுக்குச் சரிசமநிலை வாய்ந்த அமைதி தரும். உணர்ச்சிக் கொந்தளிப்புடையவர்களிடையே நன்மை தீமை ஆயும் ஆற்றலுடைய அறிவமைதி உண்டுபண்ணும்.

உலகியல் கடமைகளின் நெருக்கடி வாய்ந்த கொந்தளிப்பு களிடையே தன்னடக்கத்தின் விளைவாகிய ஆன்மிக அமைதி உவப்பு உவர்ப்பற்ற நடுநிலை, தன்னிறைவு, தன்னமைதியை