உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 29

வலுப்படுத்தும். அதுவே ஆன்மிக ஆற்றல். இவ்வாற்றலில் குறைந்த எதுவும் ஆற்றலாகமாட்டாது. அத்துடன் இந்த ஆற்றலை மற்ற ஆற்றல்களைப் போல் திடுமெனப் பெறவும் முடியாது. திடுமென இழந்துவிடுவதற்குரியதும் அன்று. அது பொது நிகழ்ச்சிகளின் படிப்படியான மலர்ச்சியாகவே பெறத்தக்கது.

முயற்சி வெற்றி தரினும் தராவிட்டாலும் அம் முயற்சியால் ஏற்படும் ஒவ்வொரு வெற்றியின் பின்னும், ஒவ்வொரு தோல்வி யின் பின்னும் அது மேன்மேலும் ஆண்மையுடன் முதிர்வுறு கிறது. மேன்மேலும் தன்னலம் என்ற சறுக்குக் குழியி லிருந்து விலகிப் பொதுநலமென்னும் உறுதியான கல்மீது கட்டடமமைக்கப்படும். அவசியமிக்க பெருங்கடமைகளும் சரி, அவசியமிக்கதாகத் தோற்றாத சிறு கடமைகளும் சரி, இரண்டும் இத்தகைய நிறைவுக்குரியவையே.

உள ஆற்றல் பெறும் வகைகளிலோ, உள ஆற்றலிலோ பிறர் மூக்கிற் கை வைத்து மருட்சி கொள்ள வைக்கும் மாய மந்திர இரகசியம் எதுவும் கிடையாது. ஏனெனில் மாய மந்திரங்கள் தரும் ஆற்றல் செயற்கையாற்றல்; நிலையான ஆற்றலுமன்று. செயற்கைச் சூழ்ச்சிகள் சிறிது மாறிவிட்டால் அது தோல்வி தருவது. அச்செயற்கை ஆற்றல்களைக் கையாளும் சமயம் வெற்றியை எதிர்பார்த்து வீம்பு முனைப்பாய் எழும் வெற்றி தவறி விட்டாலோ, உடனே சிடுசிடுப்பு, ஏமாற்றம், மனக்கசப்பு ஆகியவை உண்டாகும். மருட்சி கொள்ளவேண்டிய காட்சி யாளர் ஏளனம் செய்து சீற்றத்தையும் எரிச்சலையும் மிகுதி யாக்குவர்.

தன்னடக்கத்தின் ஆன்மிக ஆற்றலில் உள்ளுரமுண்டு; நம்பிக்கை அமைதி உண்டு. கோபதாபங்கள், மயக்க தயக்கங்கள், மருட்சி யச்சங்கள், கழிவிரக்கங்கள் கிடையா. அதில் படபடப்புக் கிடையாது. விடாமுயற்சியும் எல்லையற்ற பொறுமையும் மட்டுமே உண்டு. உண்மையான தன்னடக்க ஆற்றல் பெற்றவன் தன்னாண்மையுடையவன்; தன்னை அடக்கியாள்பவன். தன்னை யடக்காது மற்ற எதை அடக்க முயல்பவனும் ஆட்சியாற்ற லுடையவனாகான்; போலி ஆற்றல், மயக்க ஆற்றலே உடையவன் ஆவான்.