உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

ஒருமுகச் சிந்தனைப் பயிற்சி

33

தன் முன்னிலையில் வந்து நிற்கும் ஒவ்வொரு வினையையும் - அது சிறு வினையாயினும் பெருவினையாயினும் - அதைத் தன் முழு உள்ளத்தின் ஆற்றலுடன் செய்பவனே அவ்வவ் வினையின் அகப்பயன், ஆட்சிப்பயன் பெற்றவனாவான். அவன் தன் உயிருணர்ச்சி, ஊக்கம் முழுவதையுமே அவ்வொரு குறுகிய எல்லையிலேயே முற்றிலும் செலுத்த வேண்டும். அந்த எல்லைக்குப் புறம்பாக உள்ள எந்தச் செயலிலும் நிகழ்ச்சியிலும் எந்த வினையிலும் அவன் கருத்துச் செலுத்துதல் ஆகாது. அவ்வினையின் சிறுமை பெருமைகளில், வெற்றி தோல்விகளில் கவனம் செல்ல விடாமல், அதனை முற்ற முழுக்க வழுவறச் செய்து முற்றுவிக்க அவன் பாடுபட வேண்டும்.

ஒருமுகப்பட்ட கடமைப் பயிற்சியில் முனைபவன் வினையின் வெற்றி தோல்விகளுக்கு, சிறுமை பெருமைகளுக்கு அப்பாற்பட்ட உண்மைப்பயனை அடைவான். அப்பயன் உள்ளத்தை அடக்கியாளும் ஆற்றலுக்கான பயிற்சியின் ஒரு படியே யாகும். துணி தைப்பவன் கைப்பயிற்சி அத்துணியின் இயல்பும் வடிவும், விலையும் உரிமையும் கடந்து வளர்வதுபோல, அவ்வினையின் இயல்பும் தன்மையும் கடந்து அவன் தன் னடக்கப் பயிற்சியில் மேன்மேலும் முன்னேறுகிறான். ஒவ்வொரு வினையும் ஒரு படியாக, ஒருசில அல்லது பல வினைகளின் முடிவில், அவன் முற்றிலும் தன்னைத் தானாண்டமையால் வினைமுதல்வனாகிறான்.

ஒருமுகச் சிந்தனை காலத்தை ஒருமுகப்படுத்துவது.எல்லை யற்ற முக்காலப் பரப்பை ஒருகண எல்லையே உடைய நிகழ் காலத்துக்குள் அடக்குவது. அச் சிந்தனையில் பழக விரும்புபவன் இறந்த காலத்தைப் பற்றி எண்ணமாட்டான், முன்னே கழிந்த வினைகளில் கருத்துச் செலுத்தமாட்டான். அவன் எதிர் காலத்தைப் பற்றியும் கவலைப்படமாட்டான், மேல் வரும் வினைகள் பற்றியோ, தற்போதைய வினையின் பயன் பற்றியோகூட உள்ளத்தில் ஒரு சிறிதும் நினைவை ஓடவிட மாட்டான்.இதனால் எல்லையற்ற இறந்த காலமும் எல்லையற்ற எதிர்காலமும் தோற்றமற்ற சென்ற காலமும் முடிவற்ற

-