உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 29

சிந்தனையின் தளர்ச்சி: தளர்வகற்றும் ஒளி

மனிதன் மடமையால் சுமக்க வேண்டிவரும் சுமைகள் பல. பல பளுவுடையவை. ஆனால் தளர்வுற்ற சிந்தை, தன்னல அவாக்களே இவற்றைப் பெருக்குபவை, இன்னும் பலவாக்கி, இன்னும் மிகுந்த பளுவுடையவையாக்குபவை.

நெருக்கடியான நிலைமைகளில் நீ உன் சூழல்களில்தான் அந்த நெருக்கடி காண்கிறாய் ஆனால் சூழல்களின் நெருக்கடி நீ அந்நெருக்கடியை நாடி வரவழைத்ததன் பயனேயன்றி வேறன்று. அவற்றைத் தாங்கும் வலு உன்னிடத்தில் இல்லாவிட்டால், அவற்றிலிருந்து விடுபடும் ஆற்றல் உன்னகம் நிலவாவிட்டால், நீ நாடியிருக்கவே மாட்டாய். அப்பம் தின்னும் மனிதன் பற்கள் அப்பத்தைக் கடிக்கவே அவாவ முடியும். எலும்பைக் கடிக்கவோ இரும்பைக் கடிக்கவோ அவாவ முடியாது. எலும்பைக் கடித்துடைக்கும் ஆற்றலுடைய நாயின் பற்களே எலும்பைப் பற்ற நாட்டங் கொள்ள முடியும். ஆனால் ஆற்றலும் வலிவும் இருக்கும் போதும், மனிதன் நெருக்கடியை வெல்ல முடியா நெருக்கடி என்று கருதுவதுண்டு. இஃது அவன் தளர்ந்த சிந்தனையின் பயன், அகவலிமை கேட்டின் விளைவு ஆகும்.

நெருக்கடிகளை நாடிய உள்ளம் அந்நெருக்கடிகளைத் தாங்கும் ஆற்றலுடையது மட்டுமன்று; அதனால் ஆற்றல் பெருக்கும் வாய்ப்பும் உடையது ஆகும். ஒவ்வொரு புத்தவாவும் வெறியுணர்ச்சியாய் இருந்தால்கூட, ஒரு புது நெருக்கடியை உண்டு பண்ணுவதன் மூலம் உனக்கு ஒரு புது ஆற்றல் தருவதற் குரியதே.துன்ப மூலம் அது தரும் படிப்பினையான மெய்யுணர்வு,

ன்பம் பற்றிய உறுதியுணர்வு ஆகியவற்றுடன் இப் புது ஆற்றலும் சேர்ந்துதான் புது வாழ்வு தர வேண்டும். ஆகவே, எத்தகைய நெருக்கடியிலும், அந்நெருக்கடி கடத்தற்கரியது என்று தளர்வுறாதே, சோர்வடையாதே! அதை வென்று கடக்க வீறுடன் எழு!

நெருக்கடியை நெருக்கடியாகக் கருதித் துன்பச் சூழலில் மிதந்துழலாதே, உணர்ச்சி வெறிகளில் உறங்கி விழாதே! தன்னலந் தரும் மடிமையுணர்வால் தன் கையைத் தானே கட்டிக்கொண்டு பொங்கும் வெள்ளத்தில் புரளாதே! நெருக்கடி உன் செயலென்றறிந்து அதை எதிர்த்துப் போராடி வெல்ல