உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. துன்பத்தொட்டில்

பாரிஸ் நகரின் அகன்ற தெருக்களுள் ஒன்றில் காலைக் கதிரவனின் இளங்கதிர்கள் பனிக் காலத்தின் கவடுகளை நீக்கிக் கொண்டிருந்தன. தெருவின் நடுப்பகுதி வண்டிகளின் போக்கு வரவால் சேறடைந்து கிடந்தது. அதிலிருந்து சற்று ஒதுங்கி அங்கு மிங்குமாக இருபுறத்திலும் ஆட்கள் செல்லத் தொடங்கி யிருந்தனர். சற்று மேடான உலர்ந்த இடத்தில் வாதுமைக் கொட்டை களை வறுத்துச் சுடச்சுட விற்கும் நன்மாது ஒருத்தி தன் இழுப்பு வண்டியுடனும் சூட்டடுப்புடனும் நின்றிருந்தாள். அவள் கனிந்த உள்ளமுடையவள். ஏழைப் பிள்ளைகளுக்கு அவள் அவ்வப்போது காசில்லாமல் ஒன்றிரண்டு கொட்டைகள் எடுத்துக் கொடுப்பாள். ஆனால், காசு கொடுத்து வாங்குபவர் வாங்கும் போதுதானே இந்தக் கருணைப் பணி நடத்த முடியும்? வெறுங்கையுடன் ஏங்கி நின்ற ஏழைப் பிள்ளைகளைத் தாண்டிக் காசு வைத்திருந்த உயர் வகுப்புப் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து மொய்க்கத் தொடங்கியிருந்தனர்.

தெருவின் மற்றொரு பகுதியில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை வைத்துக் கொண்டு அதைக் காட்டித் தக்க பாட்டுக்களைப் பாடிப் பிழைக்கும் தெருப்பாடகன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். குழந்தை ஏசுவின் படத்தையும் அதன் பின்னால் அன்னை மேரி படத்தையும் வைத்துக் கொண்டு அவன்,

அன்னையிவள் பாரீர்! அனைத்துலகுக்கும், அன்னையிவள் பாரீர்!

தன்னருங் குழந்தைகளைத் தாய் மறப்பாளோ?