உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

9

என்று பாடிக்கொண்டு சென்றான். அப்பாட்டை ஏழைப் பிள்ளைகள் கூட அவ்வளவு ஆர்வமாய்க் கவனிக்கவில்லை; ஒரு பெரிய மாடி வீட்டின் மேல்தளப் பலகணி திறந்து அதில் முடங்கியிருந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகள் அப்படங்களைக் கூர்ந்து கவனித்து அப்பாட்டை ஆர்வத்துடன் கேட்டன. குழந்தை ஏசுவின் படத்திலிருந்து அக்குழந்தைகளின் கண்கள் வாதுமைக் கொட்டைகளை நோக்கி ஆர்வத்துடன் திரும்பின. அவர்களுக்கு ஒரு தாய் இருந்தால் இத் தின்பண்டங்களை அவர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் கண்டு ஏங்க வேண்டியிராது. மாடிவீட்டிலிருந்தாலும் அவர்கள் துணையற்ற மதலைகளாகவே இருந்தனர்! வாதுமைக் கொட்டை விற்பவள் அப்பக்கம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு இரங்கிச் சில கொட்டைகளை எடுத்துக்கொடுப்பாள். பிள்ளைகள் இந்த ‘அன்னைப் பாசத்தை' எண்ணியே நாள்தோறும் அவளை எதிர்பார்த்துப் பலகணியில் வந்து காத்திருந்தன.

அவ்விரு குழந்தைகளும்தான் மாது ழீன் பெரோன் பெற்றுவிட்டுப் போன அருஞ் செல்வங்கள். மூத்தவள் லீமாவுக்கு இப்போது ஏழாண்டுகளும் இளையவள் லாரைனுக்கு ஐந்தாண்டு களும் ஆயின. இரு குழந்தைகளும் பொற்பதுமைகள் போன் றிருந்தன. பொன்னிறத் தலைமுடிகள் காற்றில் அலைந்தாடி அவர்கள் முகத்தை மறைத்தன. மூத்த பெண் முகம் வெளுத்து அவள் மேனியும் சிறிது விளறிய தோற்றம் உடையதாயிருந்தது. அவள் மிகமிக மெலிவுற்றுக் காண்பவர்க்கு இரக்கம் உண்டு பண்ணும் தோற்றம் உடையவளாயிருந்தாள். இளைய பெண் லாரைன் அழகு இன்னும் பொலிவுடையதாயிருந்தது. அவள் நீலநிறக்கண்களில் குழந்தைகளின் மருண்ட பார்வை மட்டுமன்றி, தாயன்பின் கனிவும் நிறைந்திருந்தது. வயதில் இளையவளானாலும் அறிவில் முதிர்ந்த அவள் துணையற்றுத் தவித்த தன் தமக்கையைக் கைகளால் அணைத்துக் கொண்டு, வாதுமை விற்ற மாதை நோக்கி சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தாள்.

மாது ழீன் பெரோன் இறந்தபின் அவள் கணவன் சார்லஸ் பெரோன் மீண்டும் மணம் செய்து கொண்டான். புதிய மாது சூசேனி ழீனைப் போல எவருக்கும் பணிந்து கொடுக்கும் குண முடையவளாயில்லை. அவள் பேரவாவுடையவள். பெரோன்