உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

|––

அப்பாத்துரையம் - 30

குடியில் கால் வைத்த நாள் முதல் அவள் அதன் அரசியாய் விட்டாள். மாமியாரையும் நாத்தனாரையும் அவள் விருந்தினர் போல நடத்தினாள். ஆனால், பணியாட்களைத் தானே ஏவி அடக்குமுறை செய்தாள். அவளை மற்றவர்களும் கண்டு அஞ்சத் தொடங்கினர். கணவனும் அவளுடன் மல்லாடுவதை நிறுத்திப் படிப்படியாக அவள் கையிலேயே குடும்ப ஆட்சியை ஒப்படைத்து விட்டான்.

பெரோன் குழந்தைகளிடம் மிகுதி பாசமுடையவனா யில்லை. ஆயினும் அவன் தாயற்ற தன் குழந்தைகளிடம் அவ்வப் போது இரக்கங் காட்டுவது உண்டு. சிறப்பாக இளைய குழந்தையின் நீலவிழிகளும் அதன் சொல் திறமும் இமைந்த நடையும் அவனைக் கவர்ந்திருந்தன. ஆனால், அவன் குழந்தை களிடம் அவனை மாது சூசேன் பெரோன் மிகுதியாக விட்டு வைக்க விரும்பவில்லை. கணவனை அவள் எதுவும் சொல்வதில்லை யாயினும் பணியட்களிடம் சீறி விழுந்து “பிள்ளைகளை ஏன் கவனிக்கவில்லை? தந்தை செல்லங் கொடுத்தால் அவர்கள் கெட்டுவிடுவார்கள். அவர்கள் அறைக்கே தூக்கிக்கொண்டு போங்கள்" என்பாள். நாளடைவில் பிள்ளைகள் கீழே கொண்டு விடப்பட்டன. செவிலி அவர்களைக் கீழே வரப்படாதென்று கண்டிப்புச் செய்து விட்டாள்.

பிள்ளைகளுக்கு உணவு அவர்கள் அறைக்கே அனுப்பப் படும். உடைகளுக்கான செலவுப் பணமும் செவிலியரிடமே ஒப்படைக்கப்படும். ஆனால், பணம் மிகுதி கொடுக்காமல் மாது சூசேன் பெரோன் பார்த்துக் கொண்டாள். கொடுத்த பணம் உடைகளில் செலவழியாமலும், உடைகளும் பெரும்பாலும் தன் வீட்டுக்கே செல்லும்படியும் செவிலி அகதா பார்த்துக்கொண்டாள். உணவுகூடக் குழந்தைகளுக்கு ஒழுங்காய்த் தரப்படுவதில்லை.

பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருள் எதுவுமே கிடையாது. மூத்தவள் லீமா பசி தாங்காமல் அழுவாள். லாரைன் தன் பசியடக்கி, அவளுக்கு ஆறுதல் கூறி அழுகை அமர்த்தவும், அவ்வப்போது பிறருக்குத் தெரியாமல் உணவு தேடி ஒளித்து வைத்திருந்து கொடுக்கவும் பழகி விட்டாள். லீமா கீழே ஓட நினைத்த போதெல்லாம், தங்கை அவளைத் தடுத்து நிறுத்தி அணைத்து, அவள் மனத்தை வேறு திசையில் திருப்புவாள்.