உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மனைமாற்றம்

ஒரு நாள் பிள்ளைகள் வழக்கம்போலப் பலகணியில் ருந்துகொண்டு தெருவில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் ஒரு புறமிருந்து ஆரஞ்சுப் பழங்கள் விற்பவன் வந்து காண்டிருந்தான். குழந்தைகள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் எதிர்ப் புறத்திலிருந்தது இரு குதிரைகள் பூட்டிய பெரிய வண்டியொன்று ஒய்யாரமாக வந்தது. அது மாடியருகில் நின்றுவிடவே, லாரைன் பழக்காரனைக் கூட மறந்து அதில் கவனம் செலுத்தினாள். அதிலிருந்து பகட்டான ஆடையணிமணி உடுத்திய ஒரு வயது சென்ற மாது இறங்கினாள். அவளைப் பார்த்ததே லாரைனின் உயிர் குற்றுயிராயிற்று. அவள் லீமாவைப் பிடித்த கைப்பிடியை இறுக்கிக்கொண்டு, “ஐயோ, லீமா அதோ பாட்டி வந்திருக்கிறாள். உள்ளே வா. அறை எப்படியோ கிடக்கிறதே!" என்றாள்.

பிள்ளைகள் விரைவாக உள்ளே போக முயன்றனர். ஆனால், லீமாவின் கண்கள் பழக்காரனையே உறுத்துப்பார்த்தன. பழக்காரன் இதற்குள் மிக நெருங்கி வந்து விட்டான். அவனும் லீமாவையே பார்த்துக்கொண்டு வந்ததால், வண்டியையும் அதிலுள்ள பெருமாட்டியையும் அவன் கவனிக்கவில்லை. லீமாவை லாரைன் உள்ளே இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவன் ஒரு பழத்தை எடுத்துப் பலகணி வழியாக உள்ளே எறிந்தான். ஆனால், அந்தோ, அது குறி தவறிச் சுவரில் மோதி, வண்டியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த பெரு மாட்டியின் தலையணியின் மேலே 'தொப்'பென்ற வந்து விழுந்தது.

பெருமாட்டி பாம்புபோல் சீறியெழுந்தாள். செல்வர் சீற்றத்தின் விலையறிந்த பழக்காரன் பழத்தை எடுக்கக் கூட முயலாமல், கூடையுடன் விரைந்தோடி விட்டான். அச்சமயம்