உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

13

அப்பக்கம் வந்த அகதாகூடப் பெருமாட்டியை அங்கே கண்டு மலைப்படைந்து நின்றாள்.

இப்பெருமாட்டியே இறந்துபோன சீனின் தாயாகிய மாது பிளான்ஸி. தன் வழியிலும் பெரோன் வழியிலும் ழீன் பெருஞ் செல்வ உரிமையைக் குழந்தைகளுக்கு விட்டுச் சென்றிருந்தான். குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கு அச்செல்வத்தின் வருவாய் உரியது. ஆகவே, பெருமாட்டி குழந்தைகளைத் தானே கொண்டு சென்று வளர்க்க விரும்பினாள். ஆனால், புதிய மாது சூசேன் பெரோன் அவர்களைத் தன் கைப்பிடியிலிருந்து அனுப்ப விரும்பவில்லை. "உன் பேர்த்திகளை வேண்டுமானால் வந்து பார்த்துப் போகலாம். அவர்களை அனுப்ப முடியாது என்று அவள் கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.

""

பெருமாட்டி மாது பிளான்ஸி பிள்ளை வளர்ப்புப் பற்றி மிகக் கண்டிப்பான கருத்துடையவள் அக்கண்டிப்பின் பயனாகவே ழீன் வாழ்விழந்து போனாள் என்பதுகூட அவள் முதுமை அனுபவத்திற்கு எட்டவில்லை. மாற்றாந்தாய் வீட்டில் போதிய கண்டிப்பு இராது என்பதுதான் அவள் ஓயாத குற்றச்சாட்டு. இன்று அதற்குச் சரியான தெளிவு கிடைத்து விட்டது. தன் குடி மதிப்பெங்கே, தெருவிலுள்ள பழ விற்பனையாளன் பழம் எறியும் நிலை எங்கே? “அவன் பழங்களைப் பிச்சைக்காரப் பிள்ளை களிடம் எறிவதுபோல் எறியத் துணிந்து விட்டானே! அவ் வளவுக்குச் சென்று விட்டது பிள்ளைகளை நடத்தியமுறை!” என்று அவள் ஆரவாரம் செய்து கொண்டு தடதடவென்று வீட்டினுள் நுழைந்தாள். அகதா எவ்வளவோ முயன்று அவளுக்கு முன்வந்து குழந்தைகள் அறையை ஒழுங்குபடுத்த விரைந்தோடினாள். ஆனால், இது ஒன்றும் பயனில்லாது போயிற்று. அவள் கண்முன் எல்லாம் தாறு மாறாகக் கிடந்தன. அவள் கூரிய கழுகுக் கண்கள் அங்குள்ள கந்தல் கூளங்கள் ஒவ்வொன்றையும் தும்பு தூசுகளையும் தனித்தனியே கவனித்துக் கொண்டன. ஒவ்வொரு செய்தியையும் கவனித்து அவள் பாரிய தலையணி ஒரு தடவை ஆடிற்று.

அகதா நடுக்கத்துடன், ஆனால் வலிந்து ஒரு புன்முறுவலை வருவித்துக் கொண்டு, “பெருமாட்டி, நான் சிறிது வெளியே போயிருந்தேன். அதற்குள்...."