உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

||--

அப்பாத்துரையம் - 30

பெருமாட்டி: உன்னை ஒன்றும் கேட்கவில்லை. நீ வாயை மூடிக்கொண்டிருக்கலாம். (அகதா உடனே பின்வாங்கி அடங்கி ஒடுங்கி நின்றாள்.) “குழந்தைகளே! நான் கேட்பதற்கு மறுமொழி சொல்லுங்கள்.” லீமா உறுத்து விழித்துத் தலையணியைக் கவனித் தாள்; லாரைன், பாட்டி என்ன கேட்பாளோ என்று அஞ்சினாள். உங்களுக்கு இப்படியே ஒவ்வொரு நாளும் பழம், அப்பம் கிடைக்கிறதல்லவா?

டி

லாரைன் உடனே விடை தரவில்லை; அவள் தயங்கினாள் ஆனால், அஞ்சுதலறியாத லீமா, “ஆம். பலகணி வழியாக வகை வகையாக நல்ல மனிதர்கள் எனக்கு உணவு தருகிறார்கள். வெளியே எல்லாருக்கும் எங்கள் மீது அன்பு உண்டு" என்றாள்.

பெருமாட்டி:(அகதாவை நோக்கி) அம்மணி,நிலைமையைப் பார்க்க, இங்கே பிள்ளைகள் பட்டினியாகத்தான் இருக்கிறது போலத் தோற்றுகிறது.

இப்போது லாரைன் துணிந்து, "ஆம், பாட்டி. இரண்டு நாளாய் வெளியே இருந்து கிடைத்த ரெண்டு வாதுமைக் கொட்டையையும் ஓர் அப்பத் துண்டையும் தவிர நாங்கள் எதுவும் உட்கொண்டதில்லை” என்றாள்.

லீமா சிறுபிள்ளைத்தனமாக, “அவற்றைக் கூட நான்தான் பெரும்பாலும் தின்று தீர்த்துவிட்டேன். பாவம், லாரைனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. லாரைன் பாவம், பாவம்" என்று கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினாள்.

66

மாது பிளான்ஸியின் பழிவாங்கும் எண்ணத்துக்கு இவ்வளவு போதாதா? அவள் அகதா பக்கம் திரும்பி அவள் கன்னத்தில் இரண்டடி பளீர், பளீர் என்று அடித்தாள்.மரத்துப் போயிருந்த அவள் கைகளின் தடங்கள் அங்கே பதிந்தன. “உன்னைக் காவலரிடம் ஒப்புவித்துப் பாடம் படிப்பிக்கிறேனா இல்லையா பார். பிள்ளைகள் சிறு அணிமணிகளைக் கொண்டு நீ விற்பதாகக் கூடக் கேள்விப்பட்டேன். இனி என் கையில் அகப்பட்டாயா, உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று அவள் மீண்டும் கறுவினாள். அகதா பிளான்ஸியின் வீட்டு வேலைக்காரனுடன் நட்பாயிருந்தவள். ஆனால், அவள் சிலகாலம் அவனை விட்டு வேறு வழியில் திரும்பியிருந்தாள். வேலைக்