உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ரோஸி

ஒன்பதாண்டுகள் லீமாவும் லாரைனும் தம் பாட்டியார் ல்லத்திலிருந்து வளர்ந்தனர். இப்போது அவர்களுக்கு உணவுக்குத் தட்டில்லை. உடைக்கும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் சிறை முன்னிலும் கடுமையாகவே இருந்தது. முன்பு உணவுக்கு அலந்து அவர்கள் பலகணியில் வந்து குந்தியிருந்தனர். இங்கும் பலகணி ஒன்றே புற உலகுக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த ஒரே தொடர்பாயிருந்தது. இரு பிள்ளைகளும் ப்போதும் பிளான்ஸி மாளிகையின் பலகணியில் வந்து பதுமைகள் போலிருந்து அகன்ற உலகில் தங்குதடையில்லாமல் திரிந்த மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பர்.லாரைன் அடிக்கடி "லீமா! நாம் குழந்தைகளாயிருக்கும் போது, இதுபோலவே பலகணியில் வந்திருப்போமே அப்பா வீட்டில், அது நினைவிருக்கிறதா? அந்த ஆரஞ்சுப்பழம் வந்து விடுதலை தரா விட்டால், இன்னும் நாம் அங்கேதானே இருந்திருப்போம்?" என்பாள். ஆனால், அப்பா வீடு என்ற சொல்லே லீமாவை எப்போதும் திடுக்கிட வைத்தது. பாட்டி வீட்டின் சிறையை அவள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவள் உணவை யும் உடையையும் தவிர எதுபற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், லாரைன் தன் போக்காகத்திரிய முடியாத நிலையில் கிட்டத்தட்ட முன்போலவே வருந்தினாள்.

66

லாரைனுக்கு இப்போது பதினாலு ஆண்டுப் பருவம். அவள் பொன்னிறக் கூந்தல் இப்போது இவள் முகத்துக்கு மட்டுமின்றி உடலுக்கே ஒரு பின்னணியாகும்படி அடர்ந்து திரண்டு பெருகியிருந்தது. அக்கால முறைப்படி அதனை அவள் மயிர்க்கச்சைகளால் வாரிக் கட்டியிருந்தாலும், அடிக்கடி அது கட்டை அவிழ்த்துக் கொண்டு தோளில் வந்து புரண்டு விழும். அப்போதெல்லாம் பிளான்ஸிப் பெருமாட்டி ஏதோ பெரிய