உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

17

இடையூறு ஏற்பட்டு விட்டதுபோல, “அம்மணி, மற்ற வேலை களையெல்லாம் ஒதுக்கிவை. மேலே போய்த் தலையை வாரிக் கட்டிவிட்டு விட்டு மறுவேலை பார்" என்று கட்டளையிடுவாள். பொன்முகில் தாங்கிய இளந்திங்கள் அசைந்து செல்வதுபோல, லாரைன் மாடிப்படியேறிச் செல்வாள்.

இரு பெண்களுக்கும் ஆடல் பாடல் கற்றுக் கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. இதில் இரண்டுபேருமே மகிழ்ச்சி யடைந்தனர்.லாரைன் தன் சின்னஞ்சிறிய காலடிகளை நிலத்தில் பட்டும் பாடாமலும் வைத்து, வகை வகையான ஆடல்கள் பழகி, எல்லாரையும் மகிழ்வித்தாள். லீமா அவ்வளவு விரைவில் ஆடலைக் கற்றுக் கொள்ள முடியவில்லையாயினும், ஆடலில் தன்னை மறந்து களிக்கத் தொடங்கினாள். ஆடலாசிரியரும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதையே ஓர் இன்பமாகக் கருதினார். அத்துடன் அவர் அரண்மனையில் அரசிளஞ் செல்வியர்க்கும் கற்றுக் கொடுத்தவராதலால், அரண்மனை சார்ந்த பல செய்தி களையும் கதையேபோலக் கூறிப் பெண்களை மகிழ்விப்பார். அவர்களும் ஓய்ந்த பொழுதெல்லாம் அரசவை பற்றிய இனிய நிகழ்ச்சிகளைக் கூறும்படி கேட்பார்கள்.

இளவரசி லூயியின் பண்புச் சிறப்புகளைப்பற்றி கேட்பதில் அவர்களுக்குச் சலிப்பே தட்டுவதில்லை. முதல் முதல் புதிய ஆட்டமாகிய 'செவ்வாடல்’ கற்பித்த கதைபற்றி அவர் கூறுவார். “சிவப்பு நிறத்தைவிடப் பச்சை நிறத்திலேயே இளவரசிக்கு விருப்பம் மிகுதி. அத்துடன் சிறு பருவத்திலேயே அவள் அடமும், பிடிமுரண்டும் மிக்கவள். ஆகவே, செவ்வாடல் திறம் கூறிப் பாடம் தொடங்கிய பின்னும் அவள் ஆடல் தொடங்காமல் நிலையாக நின்றாள். அத்துடன் என்ன கூறியும் அவள் அடியெடுத்து வைக்க மறுத்தாள். செவ்வாடல் என்ற பெயர் அவளுக்குப் பிடிக்கவில்லை.செவ்வாடல் என்பதைப் பச்சை ஆடல் என்று கூறினாலல்லாமல் ஆட முடியாது என்றாள். ஆடலறிந்த அனைவரையும் வருவித்துக் கேட்டுப் பார்த்தோம். யாவரும் பச்சை ஆடலே அதற்குப் பொருந்திய பெயர் என்றனர்! பச்சை யாடல் என்று நான் கூறிய பின்னே இளவரசி ஆடினாள்.” என்று ஆடலாசிரியர் வம்பளந்தார். அதன் முடிவில் அவர், ‘அரசவை பற்றி இப்படியெல்லாம் நாம் பேசுவது தவறு. சரி, சின்ன அரசி லாரைன்! இப்போது தலைநிமிர்ந்து உன் பாடம்

66