உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

||-

அப்பாத்துரையம் - 30

தொடங்கு. ஆம். பார்வை நேராக இருக்க வேண்டும். எங்கே- ஒன்று, இரண்டு, மூன்று! சரி, அதுதான் சரி! இன்னும் சற்று டதுபுறம் நோக்கிச் சரியாக. போதும்! உடல் நெளிந்து, கால்களைப் பதமாக எடுத்து வைத்து நடமிடுங்கள். இனி கால் அசைவது தெரியக் கூடாது. மிதந்து செல்வது போன்றிருக்க வேண்டும்.நன்று! மிக நன்று!" என்று பாடத்தை நடத்திச்செல்வார்.

லாரைன் இப்போது குழந்தையாயில்லை. அவள் நடுத்தர உயரமுடையவளாகியிருந்தாலும் அந்த சந்தமாக வளர்ந்திருந்தாள். அக்காலத்தில் மணமாகாப் பருவத்திலேயே பெண்கள் வளர்ந்த மாதர்போல உடையுடுத்துவது வழக்கம். லாரைனின் அமைந்த, ஆனால் எழுச்சிமிக்க நடைக்கு அந்த உடைகூடப் பொருத்த மாகவே அமைந்தது.மார்க்கச்சின் அருகுகள் உள்ளே மீன் எலும்பு வைத்து அந்நாளில் விறைப்பாகத் தைக்கப்பட்டு வந்தன. இவை லாரைன் உடலுடன் ஒட்டி அதன் செவ்விய விளைவுகளையும் நேரொழுங்கையும் எடுத்துக் காட்டின. அவள் இடையும் நடையும் அக்காலச் செயற்கை முறையான ஆடைகளில் கட்டுப் பட்டிருந்தாலும், அவ்வாடைகள் தேவையில்லாத அளவுக்கு அவள் உடற்கூறுகள் தம் இயற்கைக் குழைவு நெளிவை வெளிப்படுத்தின. உண்மையில் சிறு பருவத்திலேயே தொடங்கப் பட்ட ஆடல் பாடல் பருவ மீறி முன்கூட்டியே அவள் உடலுக்குக் கட்டிளமையையும் கவர்ச்சியையும் தந்திருந்தன.

விளையாட்டுப் பருவத்தில் அவர்கள் விளையாட விடப் பாடாததனால், ஆண்டின் அளவு கடந்து லாரைன் உடலும் அறிவும் வளர்ச்சியடைந்திருந்தன. அவள் துன்ப வாழ்வு அவள் பெண்மையைத் தட்டி எழுப்பிற்று. மூத்தோர்களின் நடையுடை தோற்றத்திலும் பண்புகளிலும் அவள் கருத்தைச் செலுத்தித் தன் உலகியலறிவை வளர்த்திருந்தாள்.

அவள் வாழ்வின் பெருங்குறை தாய்ப்பாசம் இல்லாதது தான். அதற்கு அவள் ஏங்காமலில்லை. தந்தையுடன் பழகியாவது தன் உள்ளார்ந்த குழந்தையார்வத்திற்கு நிறைவளிக்க அவள் விரும்பினாள்; ஆனால், இதிலும் அவளுக்கு முட்டுக் கட்டைகள் ஏற்பட்டன. தன்னை விட்டு லாரைன் தந்தையிடம் பாசங் கொண்டால், அவள் மீண்டும் தந்தை வீடு சென்றுவிடக் கூடும் என்று மாது பிளான்ஸி எண்ணினாள். ஆகவே, வாரம் ஒரு