உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

II-

அப்பாத்துரையம் - 30

தந்தை வீட்டுக்குப் போய் வந்ததும். "அவர் என்ன பேசினார். நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றெல்லாம் பாட்டி குறுக்குக் கேள்வி கேட்பாள், லாரைன் அவ்வப்போது ஏதேனும் மறைத்தாலும், சொல்லாது விட்டாலும் லீமா உளறிக் கொட்டிவிடுவாள்.பாட்டி சில சமயம் சினங்கொள்வாள், சிலசமயம் எச்சரிப்பாள். 'தந்தை வீட்டில் எதுவும் பேசக்கூடாது. அங்கே எல்லாம் நஞ்சிடப்பட்டே இருக்கக் கூடும். அங்கே எ எதுவும் உட்கொள்ளக் கூடாது.'இவ் எச்சரிக்கைகள் தாயில்லாப் பிள்ளைகள் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தின என்று கூறத் தேவையில்லை.

தந்தைக்கு எப்படியாவது தன் அன்பைக் காட்ட லாரைன் அரும்பாடு பட்டாள்.அவள் தன் குழந்தைக் கலையார்வ முழுவதும் ஈடுபடுத்தி ஒரு படம் வரைந்தாள். அதை அவர் பிறந்த நாளில் அவருக்குப் பரிசாகக் கொடுக்க எண்ணினாள். ஆனால், பாட்டி அதனைக் கண்டு செய்தியுணர்ந்ததும் அதனைக் கிழித்தெறிந்து விட்டாள். லாரைனின் கனவுக் கோட்டையும் ஆர்வமும் அதனுடன் தகர்ந்தன.

அவர்களிடம் உள்ளார்ந்த பற்றுக் காட்டிய உறவினர் ஒரே ஒருவர் தாம் அது மாது பிளான்ஸியின் மகனும் அவர்கள் மாமனும் ஆகிய திரு. மான்கண்டர் மட்டுமே. அவர் தாய்க்கு அடங்கியவர்; தாயின் சீற்றத்துக்கு அஞ்சியவர். ஆகவே, தாயறியாமலேதான் அவர் பிள்ளைகளிடம் தம் அன்பைக் காட்டி வந்தார்.

ஒரு நாள் காலை அவர்கள் படுக்கையறைக் கதவில் ஏதோ பிறாண்டும் அரவம் கேட்டது. கதவைத் திறந்த போது மான் கண்டர் அவர் கண்முன் நின்றார். தம் தாயில்லாதபோது அவர் குழந்தைகள், நாய்கள், பூக்கள் எல்லாவற்றிலும் மிகுதி ஈடுபட்டு மகிழ்வார். லாரைனிடம் அவருக்கு உள்ளூரப் பற்று மிகுதி. இன்று அவர்தம் சட்டைப் பையிலிருந்து ஒரு பெட்டி போன்ற கூண்டு கொண்டு வந்திருந்தார். அதை அவர் லாரைனிடம் எடுத்துக் கொடுத்தார். ஆர்வத்துடன் லாரைன் அதை வாங்கிப் பார்த்தாள். அதனுள்ளிருந்து இரு சின்னஞ்சிறு கண்கள் அவளை உற்று நோக்கின. அது ஓர் அழகிய சிறு குச்சுநாய். அதை எடுத்து முத்தமிட்டு உச்சி தடவிக்கொண்டு, “இது ஏது மாமா? எனக்கா?' என்று அவள் கேட்டாள்.