உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

21

திரு. மான்கண்டர் “ஆம். ஆனால் நான் உங்களுக்கு ஒரு செய்தி கூறவந்தேன். இந்த நாயின் பெயர் ரோஸி. இது இனி எப்போதும் உன்னுடன் இருக்கும். வேறு யார் உன்னைக் கடிந்து கொண்டாலும். ரோஸி உனக்கு ஆறுதல் தரும். நீ பள்ளிக்கூடம் செல்ல இருக்கிறாய். இது உன் படிப்புக்குத் துணையாயிருக்கும்” என்றார்.

ரூஸென்ட் ஒணோரே என்னும் தெருவிலுள்ள கன்னித் துறவியர் கலைமாடத்திற்கு லாரைனும் லீமாவும் அனுப்பப் பட்டனர். இச்செய்தியையே குழந்தைகள் மனம் புண்படா வகையில் மான்கண்டர் அவர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். கடுமையான இப்பயிற்சியிலிருந்து மூன்றாண்டுக்காலம் அதனினும் கடுமையான கன்னிமாடப் பயிற்சிக்கு மாற்றப் பெற்றனர்.

லாரைன் வாழ்வின் மூன்றாம்படி தொடங்கிற்று.